உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மகாத்மா காந்தி முதல் சோனியாவும், ராஜீவ் காந்தியிடம் மிகவும் அன்பாகப் பழகினார். அதன் பிறகு அடிக்கடி ஏற் பட்ட சந்திப்புக்களின்போது இருவரும் மனம் விட்டு பேசி திருமணம் செய்து கொள்ளுகிற ஒரு முடிவிற்கு வந்தனர். அதன் பிறகு ராஜீவ் காந்தி தன் தாயார் இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி, "நான் மணந்து கொள்ள விரும்பும் பெண்ணை தாங்கள் வந்து பார்க்க வேண்டும்” என்று கேட்டிருந்தார் லண்டனில் அப்போது நேருவைப் பற்றிய ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதைத் திறந்து வைக்க லண்டன் வந்திருந்த இந்திரா காந்தி இந்திய துதரகத்தில் தங்கி இருந்தார். இந்திரா காந்தி தன் மகனுக்கு பதில் கடிதம் எழுதி, அதில், அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு தன்னிடம் வரும்படிக் கூறியிருந்தார். ராஜீவ் காந்தி சோனியாவையும் அழைத்துக் கொண்டு தாயாரிடம் சென்றார். இந்திரா காந்தியைக் கண்டதும், சோனியா வின் மனதில் ஒருவித நடுக்கமும்; பயமும் ஏற் பட்டது. அதைக் கவனித்த இந்திரா காந்தி, சோனியாவை தன் அருகில் அழைத்து, "பயப் படாதே; உங்கள் திருமணத்திற்கு நான் மறுப்பு ஏதும் சொல்ல மாட்டேன், நானும் உன்னைப்