பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 119 போல இளம் பெண்ணாக இருந்தபோது வேறு மதத்தைச் சேர்ந்தவரை விரும்பி மணந்து கொண் டேன், கவலைப்படாதே" என்று ஆறுதலாகக் கூறினார். திருமணம் ராஜீவ் காந்தி சோனியா திருமணம் 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவராயினும் திருமணமாகி கணவருடன் இந்தியா வந்த பிறகு சோனியா இந்தியாவையும் தன் தாய்நாட்டைப் போலவே மதித்தார், நேசித்தார். அழகாகவும், மிகவும் அடக்கமாகவும், எல் லோரிடமும் இனிமையாகவும், பண்புடனும் நடந்து கொள்கிற சோனியாவின் குணம் குடும்பத் தில் எல்லோருக்குமே மிகவும் பிடித்து விட்டது. ராஜீவ் காந்தியைவிட, சோனியா காந்தி கூச்சம் நிறைந்தவர். அரசியலில் முழுக்க முழுக்க ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வந்து விட்டபோதிலும்; சோனியா காந்தி பகட்டான அரசியலையும், விளம்பரத்தையும் அறவேவெறுத்த வர். ஒரு தாயாகவும்; கணவனுக்கேற்ற ஒரு நல்ல மனைவியாகவும் ம ட் டு மே வாழ ஆசைப்பட்டார். அவருக்கு எவ்வித பேராசை களும் இருந்ததில்லை.