பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை கப் பிளந்து நாக்கை வழித்து வாயைக் கொப்பளிப் பார். கொதிக்கும் 16 அவுன்ஸ் வெந்நீரில் தேனும் சோடா உப்பும் கலந்து மிகச் சுவையுடன் பருகு வார். --- சரியாக 4 மணிக்கு காலை பிராாத்தனை. 4-20க்கும் பிரார்த்தனை முடியும். முதல்நாள் வந்த கடிதத்திற்கு 4-30 முதல் 5-30 மணிவரையில் தம் கையினாலேயே கடிதம் எழுதுவார். காலை 6 மணிக்கு உலவச் செல்லுதல். முன் தினம் மாலைக்கு மேல் அவரைக் காண வந்தவர் களுக்கு உலவும்போதுதான் பேட்டி, திரும்பி வரும் போது ஆசிரமத்திலுள்ள நோயாளிகள் ஒவ்வொரு வரையும் சந்தித்து கூேடிமநலம் விசாரிப்பார். பேரிச்சம்பழத்தை ஆட்டுப் பாலில் ஊற வைத்துச் சாப்பிடுவதுதான் அவருடைய காலை ஆகாரம். 7-30 மணி முதல் 8 மணி வரை உடலில் எண்ணெய் தேய்த்து அவருக்கு உடம்பு பிடித்து விடுவதுண்டு. பின்னர் தண்ணிர்த் தொட்டியில் குளியல். அப்போது தான் அவருடைய சீடர்கள் அவருக்கு கூடிவரம் செய்வது வழக்கம். மீசையை மட்டும் தாமே கத்தரித்துக் கொள்வார். முகக் கண்ணாடி பார்க்கும் வழக்கமே இல்லை. குளிக்கும் போதே சிறு துயில் கொள்வது உண்டு.