பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க! அடிமை வாழ்வகன்றிந் நாட்டார், விடுதலை யார்ந்து செல்வம். குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடியோ ங்கிப் படிமிசைத் தலைமை எய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்; முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! என்று பாடினார். காந்திஜியின் அன்றாட வாழ்க்கை 'காலம் கண்போன்றது; நேரம் பொன்னா னது' என்பதை முற்றிலும் அறிந்து கடைப் பிடித்தவர் காந்திஜி. அவர் தனது அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்தினார் என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது. அதிகாலை 3 மணிக்கு அவர் துயிலெழுவார். கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடியே ஹேராம்: என்று சொல்லித் துளசிமணி மாலையை உருட்டி ஜபம் செய்வார். கொட்டாங்கச்சிகருக்கி, உப்புக் கலந்த கரிப்பொடியில், வேப்பங்குச்சியைத்தோய்த் துப் பல் விளக்குவார். அந்தக் குச்சியை இரண்டா