பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 45° தில் 1808-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி, ஒரு மரக்குடிசை வீட்டில் ஆப்ரகாம் லிங்கன் பிறந் தார், தந்தையின் பெயர் தாமஸ் விங்கன். தாயா ரின் பெயர் நான்ஸி அம்மையார். இத்தம்பதி களுக்கு இரண்டாவது மகனாக லிங்கன் பிறந்தார். ஆப்ரகாம் லிங்கனின் மூத்த சகோதரியின் பெயர் சாரா. இருவரும் பெற்றோருடன் 'வெர் ஜீன்யா' விலிருந்து கென் டக்கி என்னும் ஊருக்கு வந்தனர். அவர் தந்தை தச்சுத் தொழிலையும்! விவசாயத்தையும் செய்து வந்தார். பிறகு தச்சுத் தொழிலை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க விவசாயத்திலேயே கவனம் செலுத்தினார். ---- 1816-ம் ஆண்டு லிங்கனது 7 வயதில் பக்கத்து நிலத்தகராறு காரணமாக லிங்கனின் தந்தை குடும்பத்துடன் அந்த இடத்தை விட்டு ஜென்ரி வில்லியின் அருகிலுள்ள இந்தியானா என்னும் இடத்தில் வந்து வசித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வட்டா ரத்தில் பரவிய ஒரு தொற்று நோயினால் லிங்க னது தாயார் இறந்து போனார். லிங்கன் தாயா ரிடம் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். இதனால், தாயின் மரணம் அவர் மனதைப் பெரிதும் பாதித்தது. தன் வாழ்நாளில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும். தன் தாயாரின் பாதிப்பு இருந்த தாக அவர் நம்பினார்.