பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மகாத்மா காந்தி முதல் களின் வழியே ஊர்வலமாக நடந்து சென்று. வாஷிங்டன் தலை நகரிலுள்ள ஆப்ரகாம் லிங்கன் நினைவுச் சின்னம் அருகே ஒன்று கூடினர். இந்தப் பேரணியில் பல வெள்ளையரும் இருந்தனர். "வாஷிங்டன் படையெடுப்பு” என்று வர்ணிக் கப்பட்ட இந்த மாபெரும் பேரணி கூட்டத்தில் மார்டின் லூதர் கிங் நிகழ்த்திய உரை உணர்ச்சிப் பெருக்கெடுத்தது மட்டு மல்ல; சரித்திரப் புகழ், பெற்றதுமாகும். "அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட ஏழை கறுப்பர்களின் வேலையில்லா பிரச்சனையை அரசுக்கு உணர்த்தினார். கென்னடியின் ஒப்புதல் பெற்ற சிவில் உரிமை மசோதாவை நாடாளு. மன்றம், நிறைந்த மனத்துடன், உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் கோரினார்.” "எங்காவது ஒரிடத்தில் அநீதி ஏற்பட்டால், அது எல்லா இடங்களிலும் நீதிக்கு ஒர் அச்சுறுத்த லாகும்” என்றார். இனங்களிடையே சமத்துவமும்; அன்ை வருக்கும் சம நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே லூதர் கிங்கின் லட்சியக் கனவாகும், அன்று அவர் அதைப் பற்றியே உணர்ச்சி பொங்க உரை நிகழ்த் தினார். -