பக்கம்:மகான் குரு நானக்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

9


மன வெளியிலே கண்டு, கலந்து களி கொள்பவரே சித்தர் பெருமக்கள்.

அவர்களுக்கு மெய்ஞானமே நிறை அறிவு: அறிவால் எதையும் பாரார்; அருளால் அனைத்தையும் நோக்குவர். அலைகடல் போல அங்கிங்கெனாதபடி அலைவர் சித்தர் போக்கு சிவம் போக்கல்லவா?

ஆசையை அறுப்பதே அவர்களது துறவு. அதனால், ஆண்டவனே ஆனாலும் ஆசையை அறுமின்கள் என்பர் ஆசை மனதின் செயல்; ஞானிகட்கு தோன்றாது ஆசை

சித்தர்கள் சிந்தனைகளே சித்தாந்தம்; வேதத்தின் முடிவுகளே வேதாந்தம்; அதனால்தான் நாம் பேசும் மொழிகளல் ஆன்மீக உண்மைகளை உலகுக்கு விளக்க இயலாது என்றார்கள். ஏனென்றால், சித்தர்கள் அதிகம் பேசமாட்டார்கள் வானத்தைப் பார்ப்பார்கள் மோனத்தைத் தேடுவார்கள்; ஞானத்தை உணர்வார்கள். அவர்களே சித்தர்கள்.

ஒவ்வொரு சமயத்துக்கும் தத்துவங்கள் உண்டு. அதனால், தத்துவ வாதம் செய்து, ஒரு தத்துவத்தை மற்றொரு தத்துவத்தோடு மோதவிட்டு, எனது தத்துவம்தான் சிறந்தது என்ற தத்துவப் போராட்டம் செய்வதன்று சித்தர்கள் போராட்டம். ஒரு வேளை அவர்கள் அவ்வாறு ஈடுபட நேர்ந்தாலும் அதை ஓர் அறிவாய்வுச் சிந்து விளையாட்டாகவே அதனை மதிப்பர் சித்தர்கள்!

அப்படியானால், சித்தர்களது நோக்கம் என்ன? உடல், உயிர், உலகம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக உள்ள இறைஞானத்தைப் போதித்து, பரம்பொருள் ஒன்றே, அதன் பேறு எனப் பெற்று, மக்களின் பிறப்பறுப்பதே அவர்களது நோக்கம். உலக மக்களுக்கு அதை அறிவுறுத்துவதே அவர்களது சித்தாந்தமாகும்.

அத்தகைய ஞான மகான்களது தொண்டுகள், ஆன்மீகத்தின் அரும் புதையல்களாக மக்களால் போற்றப்படுவதற்கு என்ன காரணம்? அந்த சித்தர்கள் இறுதியாக எங்கெங்கே உயிர் துறந்தார்களோ, அந்தப் புனித இடங்கள் எல்லாம் மக்கள் நாள்தோறும் சென்று வணங்கி வழிபாடியற்றும் திருக்கோயில் களாக தெய்வத் தலங்களாக இன்றும் காட்சி தருகின்றதைப்