பக்கம்:மகான் குரு நானக்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மகான் குருநானக்


பார்க்கின்றோம். நாமும் சென்று நமது நன்றி வழிபாட்டை ஆங்காங்கே நடத்துகின்றோம்.

எடுத்துக்காட்டாக திருமூலர் தில்லையிலும், அழகர் மலையில் இராமதேவரும், அனந்த சயனத்தில் கும்ப முனியும், திருப்பதியில் கொங்கணவரும், பாரூரில் கமல முனிவரும், சோதியரங்கத்தில் சட்ட முனியும், கருவையில் கருவூராரும், கூடலில் சுந்தரானந் தரும், எட்டுக் குடியில் வான்மீகரும், காசியில் நந்தி தேவரும், சங்கரன் கோயிலில் பாம்பாட்டிச் சித்தரும், பழநியில் போகரும், திருப்பரங்குன்றத்தில் மச்ச முனியும், இராமேசுரத்தில் பதஞ் சலியும், செந்திலில் கோரக்கரும், வைத்தீஸ்வரன் கோயிலில் தன்வந்தரியும், குதம்பைச் சித்தர் மாயவரத்திலும் உயிர் துறந்த புனித இடங்கள் எல்லாம் திருக்கோயில்களாக நின்று இன்றும் மக்களுக்கு அருளாசியை வழங்குகின்றன.

மேலே கூறப்பட்ட சித்தர் மகான்கள் எல்லாம்; ஞான யோகிகளாக ஆன்மீக அருளாளர்களாக வாழ்ந்த பெரு மக்களாவார். அவர்களுக்கு சாதிகள் கிடையாது. மதங்களை மதியார் மனிதநேயம்தான் அவர்களது மதம் என்று எண்ணியவர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற இறை ஞான சிந்தாந்தம் கொண்டவர்கள்.

'யாதும் ஊரே, யாவரும் உறவினரே' என்ற விரிந்த உலகம் கான சித்த விஞ்ஞான நெறிகளை இந்த வியன் உலகுக்கு வழங்கினார்கள் தமிழ் மகான்கள். அதனால்தான் பாரதப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், ரஷ்ய நாட்டுக்கு சென்றிருந்தபோது, எங்கள் நாட்டின் மனித நேயச் சித்தாந்தம் இதுதான் என்று எடுத்துக்காட்டிப்பேசினார்கள். அதனால்தான், அந்த சிந்தாந்திகளை நாம் இன்றும் போற்றுகின்றோம்.

வட இந்தியாவிலே மேற்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள தாள்வாண்டி என்ற கிராமத்திலே பிறந்த குருநானக் என்பவரும், தமிழ்நாட்டுச் சித்தர்களைப் போல வாழ்ந்து காட்டி, அங்குள்ள மக்களுக்கு சித்தாந்தங்களைப் போதித்திருக்கிறார்.

குருநானக் இளம் வயதிலேயே இறையனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற ஞான யோகியாக வாழ்ந்து காட்டியுள்ளார்.