பக்கம்:மகான் குரு நானக்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

75


காமரூபத்தில் குருநானக்!

அசாம் மாநிலத்திலே உள்ள காம ரூபம் என்ற இடத்திற்கு குரு நானக்கும், சீடர்களும் சென்றார்கள். அங்கே புகழ்பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று, ஓரிடத்தில் நானக் தங்கினார். காமாட்சி தேவி திருக்கோவிலின் ஒரிடத்தில் குருநானக் தங்கியிருந்தபோது, அவரது மாணவன் மர்தான்வுக்கு பசிப்பிணி உயிரை வாட்டியது. பசி எடுக்கிறது குருதேவா என்றான் மர்தானா. 'மர்தானா நகருக்குள் செல். உணவு கிடைக்கும். உண்டு வா!' என்றார். ஆனால் நீ எச்சரிக்கையோடு சென்று வர வேண்டும். நகரில் சூனியக்காரிகள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை' என்று கூறி அனுப்பினார்.

நகருக்குள் நுழைந்தான் மர்தானா. அவன் போவதை சூனியக்காரிகள் மூவர் பார்த்துவிட்டார்கள். ஒருத்தி ஏதோ ஒரு மந்திரத்தைக் கூறி ஒரு நூல் கயிற்றை மர்தானாவின் கழுத்தில் வீசினாள். மனிதனாகச் சென்ற மர்தானா நாயாக மாறிவிட்டான். சத்குரு அந்த நிகழ்ச்சியை தனது ஞானக்கண்ணால் அறிந்தார். உடனே நாயாக மாற்றப்பட்ட மர்தானா இருந்த இடத்திற்கு பாலாவுடன் விரைந்தார். சத்குருவைக் கண்டதும் இரண்டாவது சூனியக்காரி ஓடி வந்தாள். 'இதோ இந்த மனிதரையும் நாயாக மாற்றுகிறேன்' என்று நானக்கைச் சுட்டிக் காட்டினாள். மந்திரம் ஜபித்த நூலொன்றைச் சத்குருவின் மீது வீசினாள்.

சத்குரு உடனே அவளைப் பார்த்து நீயே நாயாவாய் என்றார். அடுத்தக் கணமே அவள் நாயானாள் குரைத்தாள்! நானக் பாலாவைப் பார்த்து, 'நாயாக மாறியுள்ள மர்தானாவின் கழுத்திலிருக்கும் அந்த நூலை எடு' என்றார். பாலா குரு கூறியபடியே செய்ய மர்தானா மீண்டும் மனிதனானான்.

மற்றொரு சூனியக்காரி அப்போது குருநானக்கின் செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்து ஓடி வந்தாள். அவளும் வேறோர் மந்திரம் ஜெபித்த நூலொன்றைக் குருநானக் மீது வீசிட கையைத் துக்கினாள். துக்கியகை உயர்ந்தபடியே நின்றுவிட்டது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேறொரு சூனியக்காரி, தலைமை சூனியக்காரியிடம் ஓடி நடந்த விரவத்தை