பக்கம்:மகான் குரு நானக்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

87


விவசாயியாக பாடுபட்டார். சீக்கியர் என்ற அறுவடையை மக்களுக்கு வழங்கினார்.

இறைஞான தொண்டுகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அந்தப் புனிதன் குருநானக் என்ற மனித குல மேம்பாட்டின் அருளாளன், 1538 ஆம் ஆண்டில் எந்த விதமான நோய்களுக்கும் ஆளாகாமல் காலத்தோடு காலமானார்.

இந்து முஸ்லீம் என்ற வடநாட்டின் இருமத சகோதரத்துவ பாசத்துக்கு இணைப்புப்பாலமாக வாழ்ந்து காட்டிய மனித மாமேதை குருநானக் மறைந்து விட்டதைக் கண்ட அந்த இரு மதத்தினர்களும், அவரவர் மதங்களுக்குரிய மரியாதைகளோடு, அந்த ஞானச் சித்தனுக்கு சமாதியையும், கல்லறையையும் எழுப்பி வழிபாடு செய்து வருகின்றார்கள் என்பது இந்திய ஆன்மீக வரலாறு சந்தித்திராத ஓர் அற்புதமாகும்.

இன்றைக்கும் ரவி நதிக்கரை ஓரத்திலே காட்சி தரும் தேரா பாபா நானக் என்ற இடத்துக்குச் சென்று வரும் வாய்ப்புடைய லட்சக்கணக்கான மக்கள் அங்கே உள்ள குருநானக் சமாதியிலே வழிபாடுகள் செய்வதைக் கண்டுகளிக்கலாம் வளர்க குருநானக் நெறிகள்

★ ★ ★