பக்கம்:மக்கட் செல்வம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. பிள்ளைக் கனியமுது


அன்புள்ள செல்வி மங்கையர்க்கரசிக்கு,


நலன். மனைவாழ்வுக்கு அணிகலனாம் நன் மகப்பேறு வாய்த்தது அறிந்து மகிழ்கின்றேன். வாழ்வில் பெறக் கடவதாகிய செல்வங்களுள் மக்கட் செல்வமே சிறந்த ஒன்றாகும். பொருள் என்று எதை எதையோ கூறுவார்கள். எனினும் ‘தம் பொருள்’ என்று உரிமையோடும் உறுதியோடும் கூறக் கூடியது ‘மக்கட் செல்வமே’யாகும். எனவேதான் வள்ளுவர், ‘தம் பொருள் என்ப தம்மக்கள்’ என அழகாகவும் தெளிவாகவும் கூறுகின்றார். அம்மக்களைப் பேணி வளர்க்குங்கால் பெறும் இன்பம் பெரிது. குழந்தை மழலைச் சொல் மற்றெவற்றினும் இனியது; அதன் மெய்தீண்டல் இனிது; அதன் விளையாட்டு இனிது. இவ்வாறு அக்குழந்தை தரும் இன்பம் ஏட்டில் குறிக்க முடியாதது. உள்ளத்து உவகை பெருக்கும் ஒப்பற்ற வாழ்வுச் செல்வமே குழந்தையாகும். அதனாலே தான் ஆண்டவனைப் பாடவந்த அடியவரில் சிலர் ஆண்ட-