பக்கம்:மக்கட் செல்வம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பிள்ளைக்


வனையே - அப்பாலுக்கப்பாலாக நின்ற ஒருவனையே - அருமைக் குழவியாக்கிப் போற்றிப் பாடிப் பேரின்பமுற்றார்கள் !

குழந்தையைப் பற்றிக் கூறாத இலக்கியங்களே இல்லை என்னலாம். தமிழில் தொல்காப்பியனார் காலந்தொட்டு இன்றுவரை சிறக்கப் பாடி, நிலைத்த புகழால் வாழும் புலவர் அனைவரும் குழந்தை நலத்தை-பிள்ளைமை இன்பத்தைப் போற்றிப் பாடுகின்றனர். திருவள்ளுவர் ஓர் அதிகாரத்தையே குழந்தை இன்பம் காட்டக் கொண்டுள்ளார். சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்கள் பல்வேறு வகையில் குழந்தை எழில் பற்றியும், அது தரும் இன்பம் பற்றியும், அதைப் போற்றி வளர்க்கவேண்டிய பொற்பு பற்றியும் பலப்பல வகையில் பாடியுள்ளனர். அவற்றையெல்லாம் இங்கே விளக்கத் தொடங்கினால், அது ஒரு பெருநூலாகவே முடியும். எனவே அவ்வளவை யும் கூறாது இக்கடிதத்தில் சங்ககாலப் புலவர் ஒருவர் கூறியதை மட்டும் எடுத்துக் காட்டி அமைகின்றேன்.

அன்பின் அரசி!

தமிழ் நாட்டில் பலவகைப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். வறுமையில் வாடிய புலவரும் பலர். செல்வராய் இருந்த புலவரும் பலர். ஏன்? அரசர்களுக்கு அரசராக இருந்த புலவரும் பலர். பாராண்டு பல செல்வம் பெற்ற புலவருள்ளே பாண்டியரே சிறந்தவர். அவருள் ஒருவன் அறிவுடை நம்பி! ஆம்! அவனுடைய பாட்டே அவனை அறிவுடைய நம்பியாகக் காட்டுகிறது. அவனுடைய அறிவுநிலையை முன்னமே அறிந்து வைத்துத்தானோ ஏனோ அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு அப்பெயர் இட்டனர்.

அறிவுடை நம்பி மன்னர் மன்னன் ; செல்வச் சீமான் ; வற்றாத வளம் உடையவன். அவன் படைப்பில் –