பக்கம்:மக்கட் செல்வம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

11


சொல்லில்–ஆணையில் எத்தனையோ மக்கள் வாழ்ந்திருப்பர். தனது ஆணைவழி அழியாத இன்பம் கண்டிருப்பான் அவன். எனினும் அவனே கற்று, நின்று, நிலைத்து எண்ணும்போது அவன் உள்ளம் எல்லாச் செல்வங்களுக்கும் மேலான ஒரு செல்வத்தையே கண்டது. ஆம்! அதுதான் மக்கட்செல்வம். பாராண்டு பகடேறிவரும் கணக்கற்ற இருநிதி படைத்தோராயினும் அவர்களுக்கு மக்கட் செல்வம் இன்றயின் பயன் இல்லை என்பதை அந்த அறி வுடை நம்பியின் உள்ளம் உணர்ந்து கூறுகின்றது. அவன் மக்கட் செல்வம் பெற்றவனா அல்லனா என்பது பற்றி நாம் இங்கு நினைக்க வேண்டா. குழந்தைத் தன்மையை அவன் கொண்டாடுவதிலிருந்து அவன் கட்டாயம் நன்மக்களைப் பெற்று, அவர்களைச் சுமந்து, அவர்தம் மிச்சில் உண்டு, அவர்தம் குறுநடை கண்டு மகிழ்ந்தவனாகவே இருக்க வேண்டும். அவன் கற்றவனல்லனோ! அதனாலே தான் ‘தாம் இன்புறுவது உலகின் புறக்காண’ வேண்டும் என எண்ணிற்று அவன் உள்ளம். குழந்தைச் செல்வத்தால் தான் பெற்ற இன்பத்தினை வையகமெல்லாம் பெற வாரி வழங்குகின்றான், பாட்டாக. ஆம்! அவன் வாய் மொழிப்படி எத்தனை எத்தனைச் செல்வங்கள் பெற்றிருந்தாலும் குழந்தைச் செல்வமட்டும் இன்றேல் அவர்களுக்கு என்ன பயன்? அவர் தம் வாழ்நாளே பயனற்றதாக முடியும் என்கின்றான். மக்கள் நலம் எத்தகையது என்பதை ஒருசில அடிகளாலே உணர்ந்து போற்றுகிறான் அவன்.

அன்பின் செல்வி!

குழந்தை அளிக்கும் கவின் காட்சியைக் காட்டுகிறான் அவன். குழந்தை தத்தித்தத்தி நடக்கும் அருமைக் காட்சி அவனுக்கு அருள்கனிந்த காட்சியாகின்றது. தான் உண்ணும் கலத்தில் அக்குழவி கையிட்டு வாரி,