பக்கம்:மக்கட் செல்வம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பிள்ளைக்


வாயிட்டும் கவ்வியும் விதிர்க்கும் அடிசில் அதன் உடலெல்லாம் பட்டு நழுவும் காட்சி நல்காட்சியாகிறது. ஆம்! அக்குழந்தை உலகை மயக்குகிறது; பெற்றவரை மயக்குகின்றது. உலகில் எத்தகைய துன்பம் பெற்றிருந்த போதிலும் குழந்தையைக் கண்டால் அத்துன்பத்தை மறப்பதைக் காண்கிறோமே! அன்றாட வாழ்வில் அலுவகத்தே அல்லும் பகலும் உழைத்து வீடு வந்த காலத்தில் ‘அப்பா’ என அழைத்து, அப்படியே கட்டி அணைக்கும் அருங்குழந்தைச் செல்வத்தால் நம் உழைப்பின் அலுப்பையும்—ஏன் ? அவதியையும்கூட மறக்கிறோமே? ஆம்! அந்த இன்பத்தைப் பெற்றவர் தாம் நன்கு அறிவர். பாண்டியன் அறிவுடை நம்பி அந்த இன்பத்தைப் பெற்றிருக்கிறான். அவனுடைய பாராளும் பெரும் சுமையை இப்பிள்ளைமை இன்பம் மிக எளிமையாக மாற்ற உதவி இருக்கும். போர் மேல் சென்று, பகைவரை வென்றுச் சிவந்த கண்ணோடு வந்த இவனுடைய தோற்றம் அப்பச்சிளங் குழந்தையைக் கண்டதும் மாறியிருக்கும் தான். அரச வாழ்விலும், போர் முழக்கத்திலும், கொடைச் சிறப்பிலும் பிற நலங்களிலும் காணாத பேரின்பத்தை இப்பிள்ளைமை இன்பத்தால் கண்டிருப்பான் பாண்டியன் அறிவுடை நம்பி. அவ்வுள்ளம் புலமை நிரம்பிய ஒன்று. எனவே உணர்ச்சி பாட்டாக உருப்பெற்று உருண்டோடி வருகிறது. இதோ அவன் பாட்டு, நன்றாக விளங்கும்; நீயே படித்துப் படித்துப் பொருள் அறிந்து கொள்ளலாம். படி; நன்றாகப்படி.


   படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
   உடைப்பெரும் செல்வ ராயினும் ; இடைப்படக் ;
   குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
   இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
   நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
   மயக்குறு மக்களை இல்வோர்க்குப்

   பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே (புறம் 188)