பக்கம்:மக்கட் செல்வம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை II

99



பற்றி என்னென்ன கூறுகிறார்கள் என்று காட்டியே இக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

கருவில் குழந்தை தங்கினாலும் அதைத் தாங்கி வளர்க்கும் நிலை எல்லா பருவ மகளிருக்கும் அமைவதில்லை. நம் நாட்டிலே இந்த உண்மையைப் பண்டு தொட்டு அனைவரும் நன்றாக அறிந்துதான் இருந்தார்கள். சாதாரணமாகப் பெண்கள் பதினைந்து வயதுக்குமேல் நாற்பத்தைந்துவரை மகப்பெறும் காலம் எனக் கொள்வார்கள். இந்தப் பருவத்தில் உள்ள பெண்கள் தாம் மக்களைப் பெற்றெடுப்பார்கள். அவருள்ளும் சிலர் மகப்பேறு இல்லாதிருப்பதற்கும் எத்தனையோ காரணங்கள் உள. அவற்றையெல்லாம் இங்கே நான் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். எனவே நல்ல வயிறு வாய்த்த பெண்கள் தம் திருஉதரத்தில் வளரும் கருவைப் பற்றி இங்கே நான் உனக்குச் சொல்லுகின்றேன்.

இருபது நாட்களில் 2-1 மில்லி மீட்டர் அளவில் வளர்ந்த கரு மேலும் மேலும் பலப்பல மாறுதல்களைப் பெறுகின்றது. மூன்றாவது வாரத்தில் தான் அதன் உருத்தோற்றத்தில் மாற்றம் அமைகின்றது. கருவைச் சுற்றிப் பல அறைகள் (Amnion) உருவாகத் தொடங்குகின்றன. இருபத்து ஏழாவது நாளில் குழந்தையின் உறுப்புக்கள் ஒருசில தோற்றமளிக்கத் தொடங்குகின்றன என்பர். அவை என்னென்ன உறுப்புக்கள் என்பதைத் திட்டமாக நம்மால் எடுத்துக் கூற முடியவில்லை. என்றாலும் மேலை நாட்டு அறிஞர்கள் ஆய்வுகள் ஆராய்ச்சியினால் அவற்றின் வளர்ச்சி நுணுக்கங்களையெல்லாம் உற்று அறிந்து உலகுக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான்காவது வாரத்தின் இறுதியில் முட்டிகள் (limbs) சிறு சிறு முளைகள் போலத் தோற்றமளிக்கும். ஐந்தாவது