பக்கம்:மக்கட் செல்வம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கருவில்



வாரத்தில் தலையின் சில உறுப்புக்கள் தோன்றும் என்பதை நன்றாகக் கண்டுபிடித்திருக்கின்றனர். நான்காவது வாரத்தில் உருவாகத் தோன்றிய கீழ் மேல் முட்டிகள் ஆறாவது வாரம் வரையில் ஒரே அளவில் தான் அமைகின்றன. எனினும் ஆறாவது வாரத்திற்குப் பிறகு அவற்றின் வளர்ச்சியிலும் அமைப்பினும் மாறுபாடு உண்டாகின்றது. அந்த வாரத்துக்குப் பிறகு இணைப்புக்கள் (joints) உருவாகும். இவ்வாறு வளரும் கரு ஐந்தாவது வாரத்தில் 9 மில்லி மீட்டர் நீளம்தான் இருக்கும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். எனவே அரை அங்குல நீளம் வளர்ச்சி அடைவதற்குள்ளாகவே, அந்தச் சிறு கருவில் இத்தனை மாற்றங்களும் அந்த ஐந்து வாரங்களில் நடைபெறுகின்றன என்பதை அறிய ஆச்சரியமாக இல்லையா? ஆம்! இவை நாம் அறியாமலேயே நம் வயிற்றில் நடைபெறும் மாற்றங்கள் அல்லவோ?

செல்வி

இவ்வாறு ஆறு வாரங்கள்வரை உண்டான மாறுதல்களுக்குப் பிறகுதான் குழந்தைக்குப் பிற உறுப்புக்களும் பிறவும் தோன்றும் என்கின்றனர் ஆய்வாளர். சதை (Muscles) அடுத்துத் தோன்றுவது போலும். அடுத்துப் புறத்தோலும் மயிரும் பிறவும் தோன்றும். முன் திருநாவுக்கரசர் கருத் தோற்ற வளர்ச்சியில் முதலில் மூளை தான் தோன்றுமென்றார் என்று முன் கடிதத்தில் குறித்திருந்தேனல்லவா! இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றார்கள். மூளை தான் முதலில் தோன்றுவது. அதை அடுத்து மூன்று அறைகள் (Primary Cerebral Vesicles ) உண்டாகின்றன என்கின்றனர். இந்த அறைச் சுவர்களின் செறிவே பின் திண்மை பெற்று நரம்பின் அமைப்பை உண்டாக்குகின்றன. பின் அந்த நரம்பின் அமைப்பே அதன்வழி மூளையின் செயல்படு