பக்கம்:மக்கட் செல்வம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை II

101



முறையை அமைக்கின்றதாம். எனவே முதலில் நரம்புகளே உண்டாகின்றன என அவர்கள் காட்டுகின்றனர். இதைத்தான் அப்பர் அன்றே காட்டியிருக்கிறார்.

இவ்வாறு நரம்புகள் வழிச் செயல்படும் மூளையின் தொடர்ச்சியே பின்புற ஓடு, முதுகெலும்பு (Spinal cord) ஆகியவற்றை உருவாக்கும் நிலையை உண்டாக்குகின்றது. மனித உறுப்புக்களின் முதல் முதல் வளர்ச்சி மூளையே என்பதை அறிஞர்கள் நன்கு காட்டுகின்றார்கள். இந்த மூளை வளர்ச்சி ஐந்தாவது வாரம் தொடங்கி நான்கு அல்லது மூன்றாவது வாரத்தில் முற்றுப் பெறலாம் எனக் கணக்கிட்டிருக்கின்றனர். அதன் இடையமைப்பு 10-2 மில்லி மீட்டர் இருக்கும் எனக் கணக்கிட்டிருக்கின்றனர். இந்த மூளையின மையமாகக் கொண்டே பிறகு கண், மூக்கு, காது முதலியவற்றுடன் கூடிய நரம்புகள் தொழில்பட அமைகின்றன. இவையெல்லாம் அந்த நரம்புகளின் தொடர்பும் ஊட்டமும் கொண்டே வளர்கின்றனவாம். இவற்றை ஒட்டியே அடுத்தடுத்து இரத்த நாளங்களும் இரத்தக் குழாய்களும் உருப் பெற்றுத் தோன்றி வளர்ந்து வருகின்றன என்பர். இவைகளுக்கெல்லாம் மேலாக மக்களது இதய அமைப்பும் ஏறக்குறைய இந்தத் தொடக்கக் காலத்திலே அமைந்து விடுகின்றது என்பர். ஆம்! இதயத்தைப் பிற உறுப்புக்களைப் போன்று எடுத்துக் காட்ட முடியாது. இதயம் தொழில்படும் மார்புக்குள் இலங்கும் ஈரல் இரத்த நாளங்கள் போன்றவற்றை எடுத்துக் காட்டலாம் என்றாலும் இதயத்தைக் காட்ட முடியாதே! ஆம்! அதைக் காட்ட முடியாவிட்டாலும் அது ஆட்சி புரியும் அந்த இடத்தில் தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு அதன் தோற்றத்தையும் இந்த நான்காவது வாரத்தை ஒட்டியதாகவே


*Mustaf's Systematic Anatomy (Page 119 & 120} and A Text Book of Midwifery by R. W. JOHN STONE.