பக்கம்:மக்கட் செல்வம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தாயில் தூவாக்



அவற்றால், குழந்தை-பால் உண்ணும் பச்சிளங் குழந்தைபாதிக்கப்படுமானல், அவற்றை ஒதுக்கத்தான் வேண்டும். அதேபோன்று ஒருசில உணவு வகைகள் உனக்குப் பிடிக்காததாக இருப்பினும் அவற்ருல் குழந்தை நலம்பெறும் என்றால் அவற்றை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் நோய் உற்ருல் சில சமயம் நீ மருந்துண்ணக் கூடத் தேவையாக இருக்கும். அப்படி உண்பதால் உன் உடலுக்கு நன்மை இல்லை என்றாலும், அதனால் பாலுண்ணும் குழந்தைக்கு நன்மை உண்டாயின் அந்த மருந்தை விரும்பியே உண்ணல் வேண்டும். இப்படி உணவை நிலையறிந்து உண்டும் மருந்து உண்டும் குழந்தையைக்காக்க வேண்டிய பொறுப்பு பெரிது ! மிகப் பெரிது !

குழந்தைக்கு உரிய காலத்திலே வேற்று நோய் அணுகா வண்ணம் அம்மை குத்தல் முதலியன பற்றியும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளல் கடமையாகும். மற்றும் கண்டவர்கள் குழந்தையை எடுக்க விடலாகாது. குழந்தை என்ருல் அனைவருக்கும் பாசம் உண்டாவது இயல்புதான்; அதை யாரும் தடுக்க இயலாது. எனினும் கண்டவர் கைப்படின் நம்மை அறியாமலேயே சில நோய்கள் இளம் குழந்தையைப் பற்றிக் கொள்ளும். படை முதலிய நோய்கள் அவ்வாறு பற்றுவனவேயாகும். குழந்தையை யாரும் தொடவேண்டாம் என்றாலும் வருபவர்கள் வருந்துவார்கள், அனைவரும் எடுத்தாலும் அல்லல் நேரும். எனவே இரண்டுக்குமிடையே மிக எச்சரிக்கையாக இருந்து குழந்தையைப் போற்றிப் புரக்க வேண்டும்.

சிலர் குழந்தைகளுக்குப் பேச வந்தபின் அதனிடம் தகாத வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்து உற்றார் உறவினர் வேடிக்கையாக வையச் சொல்வதைக் காண்