பக்கம்:மக்கட் செல்வம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழவி

37



குழந்தைக்கு யாதொரு பிணியும் அணுகாவகையில் பாதுகாத்தல் அவசியம், அதற்குரிய சுற்றுச் சூழலை அமைத்துக்கொள்ளல் நல்லது. உயர்ந்த உப்பரிகையில் வாழ்ந்தாலும், சென்னை நகரில் பலர் வாழ்வதுபோன்று. ஒண்டுக் குடியாக வாழ்ந்தாலும் அன்றிக் குடிசையில் வாழ்ந்தாலும் அந்த நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். மிக்க வெப்ப நிலையிலோ மிக்க குளிர் நிலையிலோ இல்லாதபடி குழந்தையை ஆடையால் பாதுகாக்க வேண்டும். பட்டாடையும் கம்பளியும் பகட்டுடையும் வேண்டுமென நான் கூறமாட்டேன். அது வட்டும் கந்தலுமாக இருந்தாலும் குழந்தைக்கு நலம் கெடாத நல்ல தூய்மை உடையதாக இருக்கவேண்டும். 'கந்தையானலும் கசக்கிக்கட்டு' என்ற பழமொழி பெரியவர்களுக்கு மட்டுமன்று. இளங் குழந்தைகள் ஆடையையும் அதற்குப் பயன்படும் துணிமணிகளேயும். அவ்வப்போது கசக்கித் துப்புரவு செய்தல் வேண்டும். அழுக்குப் பொருள்கள் ஒன்றும் அதன் அருகில் இருக்க விடலாகாது. குழந்தைவிடும் சிறுநீர் மலம் ஆகியவற்றை உடனுக்குடன் கண்டு விலக்கித் தூய்மைப்படுத்த வேண்டும். சற்று வளர்ந்த குழந்தைகளாயின் எதையும் எடுத்து வாயில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை உண்டாகிவிடும். அது காலை அதன் கையில் ஒன்றும் பற்றாதவகையில் பத்திரமாய்ப் பாதுகாக்க வேண்டும்.


குழந்தையின் உடலுக்கு நோய்வராமல் பாதுகாக்கும் பொறுப்பு தாயின் கையிலேயே உள்ளது. அதற்கு, நோய்வரின் தாய் மருந்து உண்ணவேண்டும். அதற்கு, நோய் வராதவகையில் எவ்வெவ்வாறு உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டுமோ அந்த வகையிலேயெல்லாம் அமைத்துக் கொள்ளவேண்டும். ஒரு. சில உணவுவகைகள் உனக்குப் பிடித்தமாக இருக்கலாம்.