பக்கம்:மக்கட் செல்வம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தாயில் தூவாக்



விளக்கியிருக்கலாம். நான் அத்துணை விரிவாக உனக்கு எழுதத் தேவையில்லை. என்றாலும் ஒரு சிலவற்றை மட்டும். இக்கடிதத்தில் உனக்கு எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

இன்றைய இருபதாம் நூற்றாண்டின் நாகரிகத்திடையிலே சிலபெண்கள் குழந்தையைப் பெறுவதே தம் அழகுக்குக் கேடுபயக்கும் என எண்ணுகின்றனர். ஒருசில பெண்கள் தமதுசெல்வத்தின் பெருமையினலோ, அன்றி வேறு காரணத்தாலோ தாம் பெற்ற குழந்தை களைத் தாமே வளக்காமல் வேறு பணிப்பெண்களே வைத்து வளர்க்கின்றார்கள். ஒருசிலர் தம்முடைய குழந்தைகளுக்குப் பால் கொடுக்கவும்கூட அஞ்சித் தம் புற அழகைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்களே எல்லாம் எண்ணின், உலகில் அக அழகை விரும்பாத - புற அழகைப் போற்றும் - அவர்களால் அவர்தம் வீட்டுக்கோ நாட்டுக்கோ பயன் விளையாது. என்பது விளங்கும்.

அரசி !

குழந்தையைப் போற்றி வளர்த்தல் அவ்வளவு எளிதன்று. குழந்தை பிறக்குமுன்பே தாய் பலவகையில் தன் உணவு முதலியவற்றில் வரும் ஆசைகளை அடக்கிக் கொள்ளவேண்டும், வயிற்றிடை வளரும் சிறுகருவின் வளர்ச்சிக்கு இடையூறுதரும் எந்த உணவையும் உண்ணலாகாது; எந்தச் செயலையும் செய்யலாகாது. நல் முறையில் மகப்பேறு நடக்கத்தக்கவகையில் உடல் நலத்தைப் போற்ற வேண்டுவது தாயர் கடன், ஆம்: நீ அந்தவகையிலெல்லாம் உடல் நலம்பேணி நன்மகப் பேற்றினே அடைந்துள்ளாய். இனி அதைக் கண்ணும் கருத்துமாகப் பா து கா ப் ப தி ல் உறுதி கொண்டு சிறக்கச் செயலாற்ற வேண்டும்.