பக்கம்:மக்கட் செல்வம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தாயில் தூவாக்


உள்ளன என்பதையும் நீ அறிவாய். அவர் தாயின் காப்பு இன்றேல் குழவி எந்த நிலையில் வாடும் என்பதை உவமையாகக் காட்டி விளக்குகின்றார்,

சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி சிறந்த வீரன்; சோழர் குலத்தோன்றல். அவன் அறத் தாறு வாழ்ந்தவன்; போர் வீரன். அவன் மாற்ருர்மேல் படை எடுக்க நினைத்தால் அவர்கள் அஞ்சி நடுங்குவர். அவர்தம் நாடுகள் அழிந்து கெட்டொழியும். பகைவர் இவன் படைஎடுப்புக்கு அஞ்சி அஞ்சி ஒடி ஒளிவர்அன்றிப் போரிட்டு மாய்வர். இவன்,

"

அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந்தேர் மிசைப் பொலிவுதோன்றி மரிக்கடல் நிவந் தெழுதரும்

செஞ்ஞாயிற்றுக் கவின்' (புறம் 4):

கொண்டு விளங்குபவன். ஆனால் தோற்ற அல்லது ஒடி ஒளிந்த பகைவர்கள் நாடுகள் என்னுகும்? அவை: எவ்வாறு கிலேகெடும் ? அக்காட்சியைப் பரணர் எண்ணி எண்ணிப் பார்க்கிறார். எதை உவமை கூறலாம் என நினைக்கிறார். அவருக்குத் தோன்றுவது ஒன்றேதான். ஆம்! அதுதான் தாயால் பாதுகாக்கப் பெறாத குழந்தை. மற்றோருடைய மாறுபட்டுக் கெட்ட நாட்டுக்கு அந்தக் குழந்தையேதான் உவமையாக்கப்பட்டது. தாயின் பாசத்தால் பிணிக்கப்பட்டு அன்பால் அணைக்கப்பட்டு வளராத குழந்தை எவ்வாறு வாடி வதங்கி வளமிழக்குமோ அதுபோன்றே இளஞ்சேட் சென்னியின் பகைவர் தம் நாடும் கெடும் என்கின்றார். அவர் கூறிய அடிகள் இவைதாம்,

'தாயில் தூவாக் குழவி போல ஒவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே"

- (புறம் 4)