பக்கம்:மக்கட் செல்வம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழவி

41



அன்பின் அரசி !

பரணர் உலக வாழ்வில் பட்டுழன்றவர். இல்லற வாழ்வில் மனைவியின் ஏற்றத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி நன்கு அறிந்தவர். பிறிதொருகால் பேகன் என்பான் தன் கண்ணனைய மனைவி கண்ணகியைப் பிரிந்திருந்த காலத்து அவனைக்கண்டு அறங்கூறி, அவன் மனமாட்சியோடு வாழ வழிவகுத்தவர். அவர்தாம் இக் குழந்தை வளர்ப்பதையும் நன்கறிந்து இந்த உவமை யைக் காட்டுகிறார். அவர் கூற்றின்படி குழந்தை தாயால் எவ்வாறு சிறக்கப் போற்றி வளர்க்கப்பட வேண்டும் என்பது தெரிகிறதல்லவா? ஆம் ! அவர் இரண்டே அடிகளில் எத்தனையோ பெரிய உண்மைகளை அடக்கிவிட்டார். பெற்ற தாயார் உற்றதம் குழவிக் செல்வத்தை ஓம்பிப் பாதுகாவாவிடின் மாற்று மன்னரால் அடியோடு அழிவுற்ற நாடென அது கலியும் என்பது தெரிகிறதல்லவா! இது தெரிந்துதான் உலகில் பலரும் தம் மக்கட் செல்வத்தைப் போற்றிப் புரக்கிருர்கள். ஓரறி உயிர் தொடங்கி ஆரறிவுடைய உயிர்வரை குழவிச் செல்வத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த ஞானியும் கடப்பரோ மக்கள்மேல் காதல் என்று, முற்றும் துறந்த முனிவரும்கூடத் தம் மக்கள்மேல் கொண்ட காதலே - பற்றை - பாசத்தை - அன்பை மறக்க மாட்டார்கள் என்பதை விளக்கிக் காட்டியுள்ளார்கள். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்ற பழ மொழியும் நாட்டில் உள்ளதை நீ அறிவாய். இன்னும் மரம் செடி கொடிகளும், பிற விலங்கு ஊர்வன முதலியவையும் பறவைகளும் தத்தம் இனப்பெருக்கத்தை வளர்க்கும் விதங்களையும் தம்முடைய இனக்குஞ்சுகளைப் போற்றும் விதத்தையும் இன்று உயிர் நூற்புலவர்கள் ஆய்ந்து ஆய்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்களலல்வா!...அடுத்தமுறை அவற்றுள் சில நூல்களை (ஆங்கி

3