பக்கம்:மக்கட் செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தாயில் தூவாக்



லத்தில் உள்ளவை) வாங்கி அனுப்புகிறேன். ஓய்வுள்ள போது படித்துப்பார். தாம் பெற்ற சிறு குஞ்சுகளுடன் அவை எவ்வளவு பாசத்தோடு நடந்து கொள்ளுகின்றன என்பதை நீ அறிவாய்!

ஏன்? நம் வீட்டில் வீட்டுச் சிறுகுருவிகள் தம் குஞ்சுகளுக்கு வாயில் இரை கொண்டுவந்து கொடுத்து மகிழ்வதை நீ பார்த்திருக்கிருயே குரங்கும் பூனையும் தம் குட்டிகளைக்காப்பதைக்கொண்டே 'நியாயங்களை வகுக்கவில்லையா அறிஞர்கள். எனவே உலகில் உயிர் பெற்ற ஒவ்வொன்றும் தம் கருவிலிருந்து வந்த சிற்றுயிரைப் போற்றி வளர்க்கின்றது. மனிதன் அவற்றினும் மேலாகத் தன்னை மதிக்கின்றவதைலின் மிக நல்ல முறையில் வளர்க்கக் கடமைப்பட்டவனாகின்றான். இதைத்தான் பரணர் வேறுபாட்டு வேந்தர்தம் நாட்டு அழிவினைக் காட்டி, இந்த உவமைவாயிலாக விளக்குகிறார்.

இதே கருத்தை அரிசில்கிழார் என்ற மற்றொரு புலவரும் அழகாக எடுத்துக் காட்டுகின்றார். அதியமான் தகடுர் பொருது வீழ்ந்த எழினியை அவர் பாடிய தாகவரும் பாட்டு புறநானூற்றில் (250) வருகின்றது. மற்றொருடைய நிலைகெட்ட தன்மையை விளக்கவருகின்ற புலவருக்குத் தாயினை நீத்த குழவிதான் நினைவுக்கு வருகின்றது. அருமை அன்னேயரால் பாதுகாக்கப்பட வேண்டிய குழவி அந்த நல்லணப்பை நீத்தால் எப்படிச் சிறக்க வாழ முடியும்? இதை எண்ணித்தான் அரிசில்கிழார்,

"

ஈன்றாள் நீத்த குழவி போன்று
தன்அமர் சுற்றம் தலைத்தலை இணைய கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு நோய் உழந்து வைகிய உலகு" -
- (புறம் 230)