பக்கம்:மக்கட் செல்வம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர்களும், சமய்நெறியையும் வாழ்க்கை நெறியையும் பண்பாட்டையும் உலகுக்கு உணர்த்தும் தலைவர்களும் போற்றும் ஒரே செல்வம் இம்மக்கட் செல்வமேயன்றோ! - இதை மறந்தும் துறந்தும் வாழ்வோம் என எண்ணுவது மனிதப் பண்பாடு ஆகுமா?

இத்தகைய மக்கட் செல்வமே மணவாழ்வின் இன்பப் பரிசு. எனவே இந்நூலுக்கு ‘மக்கட் செல்வம் - மணப் பரிசு’ என்ற பெயரையே இட்டுள்ளேன். இதில் எனது உள்ளத்தெழுந்த ஆர்வம்பற்றி இரண்டொரு கடிதங்களைச் சற்று நீள விட்டிருப்பேன். இதுபோன்றே மக்கட் செல்வம் பற்றிப் பலப்பல - விளக்கங்களை எழுதிக் கொண்டே போகலாம். வளர்ந்த குழந்தைகளைப் போற்றும் விதத்தையும், தந்தை மகற்காற்கும் உதவியையும் பிறவற்றைப் பற்றியும் விளக்கிக்கொண்டே செல்வின் நூல் விரிவடையும். இளங்குழந்தைகளை உள்ளத்தில் கொண்டு, அந்த அடிப்படையிலே இக்கடி தங்கள் அமைகின்றமையின் இத்துடன் நிற்கின்றேன். காணும் அறிஞரும் அன்பரும் தத்தம் கருத்தை எழுதவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

வாழ்க இல்லறம் !

வளர்க மக்கட் செல்வம் !


சென்னை -30.
25 - 3 -60

அன்பன்,
அ. மு. பரமசிவானந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மக்கட்_செல்வம்.pdf/8&oldid=1380859" இலிருந்து மீள்விக்கப்பட்டது