பக்கம்:மக்கட் செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரை வாழ்ந்த தமிழ்நாட்டுப் புலவர்கள் இக்குழந்தையைப் பற்றிப் பாராட்டிய கருத்துக்களே ஓரளவு காட்டியுள்ளேன். இங்கே நான் காட்டாத புலவர்தம் வாய்ச் சொற்கள் இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கலாம். நான் அக்கருத்துகளே இந்நூலில் சில கடிதங்களாகப் பல்வேறு தலைப்புக்களில் எழுதியுள்ளேன்.

நூலின் பிற்பகுதியில் வெறும் இலக்கிய்ங்களை மட்டும் எடுத்துக்காட்டாது, இன்றைய விஞ்ஞானிகள் கருவில் வளரும் குழந்தையையும் பிறந்து வளரும் குழந்தையையும் எப்படி எப்படி ஆராய்கின்றர்கள் என்பனவற்றை ஓரளவு தொட்டுக் கிரிட்டியிருக்கிறேன். கருவில் குழந்தை வளரும் முறை பற்றியும், பிறந்த குழந்தை மெல்லமெல்ல உலகச் சூழலே உணர்ந்துகொள்ளும் முறை பற்றியும் தனித்தனி இரண்டிரண்டு கடிதங்களில் காட்டியுள்ளேன். மக்கட் செல்வத்தை அன்போடு அணைத்து வளர்க்க வேண்டிய அவசியம் பற்றி ஒரு கடிதத்தில் விளக்கியிருக்கிறேன். கடைசிக் கடிதத்தில் இன்றைய உலகப் போக்கைக் கண்டிக்கு முகத்தான் குடும்பக் கட்டுப்பாடு தேவையற்ற ஒன்று என்பதையும் விளக்கியுள்ளேன்.

இருபதாம் நூற்றாண்டு நாகரிகத்தின் கோலம் எத்தனயோ வகையில் பு ல ப் ப டு கி ற து. இயற்கையை மறந்த செயற்கை வாழ்வு தலை விரித்தாடுகிறது. அதன் அங்கமாக அமையும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி விளக்கி எழுதி இயற்கை வாழ்வுக்கு அது முரண்பட்டது எனச் சுட்டிக் காட்டியுள்ளேன். சிலர் குடும்பக் கட்டுப்பாட்டு சூழலில் சிக்கியும், சிலர் மணம் செய்துகொள்ளாது இயற்கைக்கு முரண்பட்ட வாழ்வு வாழ்ந்து வகைகெட்டும் மக்கட் பிறவியில் என்றென்றும் பெற்று நலமுற வேண்டிய மக்கட் செல்வத்தை இழக்கும் நிலையை எண்ணின் அறிவந்த மக்கள் வருந்துவரல்லரோ! உலகம் தோன்றிய நாள்தொட்டு இலக்கியமும் கவிதையும் பாடிய கற்பனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மக்கட்_செல்வம்.pdf/7&oldid=1380557" இலிருந்து மீள்விக்கப்பட்டது