பக்கம்:மக்கட் செல்வம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. பாரதியும் பாப்பாவும்


அன்பின் அரசி!

சங்க காலப் புலவர் தொடங்கி இன்றைய புலவர் வரையில் பலரும் குழந்தையைப் பற்றிப் பாடிய பல பாடல்களையும் அவற்றின் கருத்துக்களையும் நீ இதுவரை கண்டுவந்தாயல்லவா! நம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார் பாடல்களிலேயும் இரண்டொன்றை உனக்கு முன்பே எடுத்துக் காட்டி இருக்கிறேன். பாரதியார் பாடல்கள் உனக்குப் பழக்கமானவைதாம். தமிழ் மொழியை பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் பாரத நாட்டைப் பற்றியும் அதன் சிறப்புக்களைப் பற்றியும் அவர் பாடியுள்ள பலப்பல பாடல்கள் நீ அறிந்தவை தாம். அவர் கண்ணன், கண்ணம்மா இருவரையும் முன்னிறுத்தி அவர்களைப் பலப்பல வகையில் பாராட்டிப் போற்றுகின்றார். அவற்றுள் கண்ணம்மாவைக் குழந்தையாக்கி அவர் பாராட்டும் பாடல் சிறந்த ஒன்று.