பக்கம்:மக்கட் செல்வம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும் பாப்பாவும்

83


தெய்வங்களைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடும் மரபு பற்றி உனக்கு முன் கடிதத்தில் எழுதியுள்ளேன். இங்கேயும் பாரதி அதே வகையிலேதான் கற்பனையில் தெய்வத்தைக் குழந்தையாக்கிப் போற்றி, அக்குழந்தையின் பிள்ளைமை விளையாட்டையெல்லாம் அழகுபடப் பேசுகின்றார். பாரதியாரின் பாடல் இனிமை யாக அமைவதோடு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் உள்ளது என்பதை நீ நன்கு அறிவாய் அன்றோ ! ஆம்! அதே இனிமையும் எளிமையும் கலந்த பாடல்களால் ‘கண்ணம்மா’ என்ற கற்பனைப் பெயரில் குழந்தையை முன்னிறுத்திப் பிள்ளைமை இன்பத்தை யெல்லாம் வாரிவாரிப் பெய்கின்றார் அவர். அவர் தம் இந்தப்பாடல்களெல்லாம் நீ அறிந்தவைதாம். சில பாடல்களைத் திரைப்படங்களிலும் தனிமுறையிலும் பாடிக்காட்டி நாட்டில் ஒலி பெருக்கிவழி அப் பாடல்களை வீசிக்கொண்டுதான் இருக்கின்றனர். எனினும் இங்கே ஒருசிலவற்றை நான் உனக்கு எடுத்துக் காட்ட நினைக்கின்றேன்.

அரசி!

உலகில் வாழும் மக்களுக்குப் பிள்ளைகளே பெரும் செல்வம் என்பதை வள்ளுவர் முதலிய பல அறிஞர்கள் கூறியிருப்பதை நீ நன்கு அறிவாய். பிள்ளைகளுக்கு வடமொழியில் ‘புத்திரன்’ ‘புத்திரி’ என்ற பெயர்கள் உண்டென்றும் அவர்கள் பெற்றோரைப் ‘புத்து’ என்னும் நரகத்தில் இருந்து மீட்பவர்களென்றும் அறிந்தவர்கள் கூறுவார்கள். எனவே பிள்ளைப் பேறு இம்மையில் மட்டுமன்றி, மறுமைக்கும் இன்பம் தரவல்லது என்பது அனைவரும் ஒருசேர ஒப்புக்கொண்ட உண்மையாகும். ஆம்! அக்குழந்தைகளே பெற்றவர்தம் கலி தீர்க்க வரும் பெருந்தெய்வங்கள். பெற்றவர். உள்ளத்தே எத்தனையோ வேதனைகள் பின்னிக் கிடந்தாலும், இளங்-