பக்கம்:மக்கட் செல்வம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கருவில் குழந்தை II


அன்பின் செல்வி!

எனது முந்திய கடிதத்தில் கருவில் குழந்தை இருபதாவ்து நாளில் 2-1 மில்லி மீட்டர் அளவு இருக்கும் என்று கூறினேன் அல்லவா? இன்று தொடர்ந்து அக்கருவின் வளர்ச்சி பற்றி எழுதுகிறேன். பத்துத் திங்களிலும் கருவில் குழந்தை எத்தனை எத்தனையோ வகையான மாறு ஷதல்கள் பெறுகின்றன என்று மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளார்கள். நம் தமிழ் நாட்டிலும் பண்டைக் காலத்தில் வாழ்ந்த பல சமயத் தலைவர்கள் இவற்றை வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் திங்கள்தோறும் உண்டாகின்ற மாற்றத்தைக் கூறித்தான் சென்றிருக்கிறார்கள். சில நூற்றாடுண்களுக்கு முன் வாழ்ந்த பட்டினத்தடிகள் இக் கருவளர்ச்சியைத் தொகுத்துக் காட்டுகிறார்.