உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கரின்‌ அருளின்‌ பெருமை அறியார்‌, நாத்திகன் என்று ஏசுவான்‌. கத்தோலிக்கரோ, தாம் தவிரப்‌ பிறர்‌ நாத்திகரே என்று கூறினர்‌.

இந்தச் சூழ்நிலையில்‌ ஜேம்ஸ் ஆளவந்தான்‌-அவனைச் சுற்றி நின்று முகமன்‌ கூறிய ஸ்காத்லாந்து நாட்டுக்‌ கத்‌தோலிக்கர்கள்‌ தங்கள்‌, நிலையை உயர்த்தும்படி கேட்டுக்‌ கொண்டனர்‌; அதற்கென்ன பார்க்கலாம் என்று மன்னன்‌ உபசாரமொழி புகன்றான்‌.

பிராடெஸ்டெண்டுகளுக்கு இது திகில்கொடுத்தது—மன்னன்‌ மீண்டும்‌ நாட்டிலே கத்தோலிக்க மார்க்கத்‌துக்கு ஆதிக்கமளித்துவிடுவானோ—அங்ஙனம்‌ நேரிட்‌டால் தங்கள்‌ நிலை குலையுமே என்பது அவர்கள்‌ அச்சம்‌. மாமன்றத்திலே, இந்தப்‌ பிரச்னை பலமான புயலைக்‌ கிளப்‌பிற்று. மன்னன்‌ எக்காரணம்‌ கொண்டும் கத்தோலிக்க மார்க்கத்தைப்‌ புகுத்துவதில்லை என்று உறுதி அளிக்க வேண்டும் என்று மாமன்றம் கேட்டது. மன்னனுக்குக் கத்தோலிக்க மார்க்கத்தைப் புகுத்துவதா கூடாதா என்ற சிக்கல் மனதில் எழவில்லை. நம்மை, நாடாளும் மன்னனை, நாதன் அருள் பெற்றவனை, இந்த மக்கள், கட்டுப்படுத்துவதா, அவ்வளவு ஆணவமா! என்ற எண்ணம்தான் எழுந்தது.

கத்தோலிக்க மார்க்கத்தை நாட்டு மக்களில்‌ பெரும்‌பாலானவர்கள்‌ விரும்பாதபோது, மக்களின் விருப்பு அறிந்து நடக்கவேண்டும், முறைப்படி மன்னனாகிய நான், அந்த மார்க்கத்தைப் புகுத்துவேனா என்று கனிவுடன் மன்னன் பேசவில்லை, இந்த மக்கள் இவ்வளவு துணிவு பெற்ற காரணம் என்ன? எனக்கல்லவா, நெறியும் முறையும் கற்றுத்தர முனைகிறார்கள்! மன்னனுக்கு மதி புகட்டுவதா மக்கள்‌ கடமை! என்று எண்ணிக் கோபம் கொண்டான்;