40
மக்கள் கண்டித்தனர். அவன் மகன் இவன்! இவனுடன் இருப்பவனும், பக்கிங்காம்! இலட்சணம் இவ்விதம் இருக்கும்போது நிலைமை எங்ஙனம் திருந்தும் என்று ஆயாசப்பட்டனர். மாமன்றம் ஒன்றுதான், இந்த நோய்களுக்கெல்லாம் மாமருந்து, என்று எண்ணினர். பாசறை அமைத்துவிட்டது!
சார்லசுக்கு வயது இருபத்துஜந்து; அவன் மணம் செய்துகொண்ட ஹெனிரிட்டாவுக்கு, பதினைந்துவயது காட்சிக்கு இனியவன், கற்றறிந்தவன், கலை நுட்பம் அறிந்தோன். ஒழுக்க சீலன், மக்களுடைய பாராட்டுதலைப் பெறுவதற்குத் தேவையான அருங்குணம் அவனிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் மக்களை அச்சமும் அருவருப்பும் அடையச்செய்யும் ‘கொள்கை’யையும் கொடியவன் என்று நாட்டினரால் கண்டிக்கப்பட்ட பக்கிங்காமையும், விடமறுக்கும்போது அருங்குணம் படைத்திருந்தாலும், பயனற்றுப் போய்விட்டது.
சார்லஸ், துவக்கத்திலேயே மாமன்றத்திடம் பணம் கேட்க வேண்டியதாயிற்று. அத்தகைய நிலைமையை உருவாக்கிக் கொண்டதும். மன்னனே!
ஸ்பெயினுடன் போர் தொடுக்கத் தீர்மானமாகிவிட்டது. ஐரோப்பாவில், உடன் பிறந்தாளின் கணவனான பலாடினேட் அரசகுமாரன் சிக்கிக்கொண்ட போருக்கு உதவி செய்யும் ஏற்பாடும் இருந்தது. ஐரோப்பிய சமரில் பிரிட்டன் பங்குகொள்ளும் நிலைமையையும் மன்னன் உண்டாக்கிக்கொண்டான். அதற்கான பெருஞ்செலவுக்குப் பணம் தேவை. டென்மார்க் நாட்டு மன்னனுக்கு மட்டும் 360000 பவுன் ஆண்டொன்றுக்குத் தருவதாகச் சார்லஸ் வாக்களித்துவிட்டான். மாமன்றத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் திரண்டெழுந்து, மன்-