உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

னன் பக்கம்‌ நின்றால்மட்டுமே நிறைவேற்றக்‌ கூடிய மகத்‌தான பொறுப்புகளை, மக்களின்‌ உரிமையை மறுப்பதையே தத்துவமாகக்கொண்ட மன்னன்‌ மேற்கொன்டது நொடி ஓட்டப்பந்தயத்துக்கு இசைந்து, உள்ள பொருள்‌ அனைத்தையும்‌ பணயம்‌ வைத்த கதைபோலாயிற்று.

மாமன்றம்‌ கூடிற்று—மன்னன்‌ பேசினான்‌ — தன் ஆட்சி முறை எங்ஙனம்‌ இருக்கும்‌ என்பதுபற்றி அல்ல, தனக்கு உடனடியாக எவ்வளவு தொகை தேவை என்பது பற்றி. மாமன்றம்‌ நிதானமாகத்‌ தன்‌ காரியத்தைக்‌ கவனிக்கலாயிற்று. “மன்னனுக்குத்‌ தொகை தேவையாம்‌ கவனிப்போம்‌! ஆனால்‌ முதலில்‌ மக்களின்‌ மனதை உறுத்‌திக்கொண்டிருக்கும்‌ பிரச்னைகளைத்‌ தீர்த்துவைக்க மன்னன்‌ முனையவேண்டும்‌” என்று மாமன்றம்‌ கூறிவிட்டு “உரிமைபற்றிய” அறிக்கை தயாரித்து, மன்னனிடம்‌ தந்தது. மன்னன்‌ வெகுண்டான்‌. ஜேம்ஸ்‌ மன்னன்‌, இதுபோல நடந்துகொண்டதற்காக, ஒருமுறை மாமன்றத்தின்‌ குறிப்பேட்டைக்‌ கொண்டுவரச்‌ செய்து, தன்‌ கையாலேயே அதனைக்‌ கிழித்தெறிந்தான்‌, அவன்‌ மகன்‌ சார்லஸ்‌! எனினும்‌ ஆரம்பக்‌ கட்டமல்லவா, எனவே, ‘உங்கள்‌ குறைகளைத்‌ தீர்த்துவைக்கிறேன்‌, முதலில்‌ பணம்‌ பெற வழி செய்யுங்கள்‌’ என்று வாதாடினான்‌. மாமன்றம்‌, மன்னனின்‌ மொழியிலே கனிவு இருப்‌பினும்‌, கடுப்புக்காணினும்‌ கவலை இல்லை, காரியம்‌ நிறைவேற்றப்படவேண்டும்‌ என்ற குறிக்கோளுடன்‌, மன்னன்‌ பிராடெஸ்டெண்டு மார்க்கப்‌ பிரசாரத்துக்கான ஏற்பாட்‌டினைச்‌ செம்மைப்படுத்த வேண்டும்‌ என்பதையும்‌, பிரிட்டிஷ்‌ அரசமார்க்க முறைப்படி தொழுகை நடத்தத்‌ தவறுபவர்களுக்கு அபராதம்‌ விதிக்க வேண்டுமென்று, கூறினர்‌.