50
மன்னனுடைய போக்கை ஆராய்ந்தறிந்தவர்கள், பக்கிங்காமின் மறைவால், மன்னன் திருந்திவிடமாட்டான், மனதிலே இருக்கும் ஆபத்தான தத்துவம் அழிந்துபடவில்லையே, அது இருக்குமட்டும், மன்னன் மக்களை விரோதியாகவே கருதி நடந்துவருவான் என்று கூறினர். மன்னனுடைய நடவடிக்கைகள் அவ்விதமே இருந்தன. மாமன்றத்தைத் துச்சமென மதித்து, கப்பல் வரி வசூலிக்கும்படி, கடுமையான உத்தரவிட்டான். மாமன்றம் தந்த “உரிமை மனு”வை உதாசீனம் செய்தான். மாமன்றம் உறுதியுடன் இருக்கும்போது, அதன் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிடுவதும், கொதிப்பு குறைந்ததும், பழையபடி பிடிவாதம் பேசுவதும் மன்னனுடைய புதுய போர்முறையாகிவிட்டது. ‘உரிமை மனு’வை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, மாமன்றத்தினர் ஒரு மகத்தான வெற்றிபெற்றதாக எண்ணி மகிழும்போது மன்னன் அந்த மனுவையும். அதற்கு மறுப்புரையும் சேர்த்து அச்சிட்டு மக்களுக்கு வழங்கினான்.
துவக்கமுதல் தூக்குமேடை செல்லும்வரையிலும், சார்லசிடம் ஒரு தவறான நம்பிக்கை குடிகொண்டிருந்தது — எதேச்சாதிகாரமாக மன்னன் நடந்துகொள்வதை மக்கள் எதிர்க்கவில்லை என்றும், உரிமை, உரிமை என்று முழக்கமிடும் மாமன்றத்தினர், துடுக்குக் குணத்தால் அங்ஙனம் செய்கின்றனரேயன்றி மக்களின் விருப்பத்தை எடுத்துரைக்கவில்லை என்றும், எதற்கும் எவருக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் மன்னனுக்குக் கிடையாது, மன்னன் ஆண்டவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டியவன் என்ற பேருண்மையை மக்கள் புரிந்து கொள்ளாவண்ணம், மாமன்றத்தினர் வெற்றுரை பேசி வெறிமூட்டி வருகின்றனரென்றும், விளக்கம் உரைத்தால் மக்கள் தெளிவுபெற்று, மாமன்றத்தை ஒதுக்கி தள்ளி-