51
விட்டு, மன்னன் பக்கம் திரண்டு நிற்பரென்றும், கருதினான். மக்கள் என்ன கருதுவர் — காலம் என்னென்ன கருத்துக்களைப் பெற்றுத் தந்திருக்கிறது, என்பதைக் கணக்கெடுக்கத் தவறினான். சவுக்கடிதான் குதிரைக்கு இன்பம் தரும் என்று எண்ணுவாருண்டா! சார்லஸ் அவ்விதம் எண்ணிக்கொண்டான்—ஏமாளித்தனத்தால் அல்ல, ஏலாத ஓரு கொள்கைக்கு அடிமைப்பட்டுவிட்டதால். மக்களுக்கு எது தேவை, எங்ஙனம் அவர்களை நடத்திச் செல்லவேண்டும், அவர்கள் நல்வாழ்வுக்கான நடத்திச் செல்லவேண்டும், அவர்கள் நல்வாழ்வுக்கான சட்ட திட்டங்கள் யாவை என்பன போன்றவைகளை அறியும் ஆற்றலும் உரிமையும், ஆண்டவனால் அரசனுக்கு அருளப்பட்டிருக்கும் வரம் என்று எண்ணினான்—கூறினான்—நம்பித் தீரவேண்டும் என்று வலியுறுத்தினான் நம்பாதவர்களை நாட்டுக்கும் அரசுக்கும், ஆண்டவனுக்கும் துரோகமிழைக்கும் மாபாவிகள் என்று கருதினான். இதனாலேதான், மாமன்றத்தார் தந்த உரிமை மனுவுக்கு மறுப்புரை எழுதி வெளியிட்டு மக்களிடம் தந்தான். அதைக் கண்டதும் மக்கள் கருத்திலே தெளிவு பெறுவர், என்று எண்ணினான். மாமன்றமும் மக்களும், மன்னனுடைய இந்த முறைகண்டு கோபம், மட்டுமல்ல அருவருப்பும் அடைந்தனர். கொடுத்த வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிடும் மட்டாகப் போக்கினனாகிவிட்டான் மன்னன் இந்த முறையைத் திறம்படு முறை எனக்கொண்டான்; எனவே, சார்லசிடம் நம்பிக்கை வைப்பதே பயனற்றது, எந்தச் சமயத்திலும், மன்னன் தன் வாக்கையும் போக்கையும் மாற்றிக்கொள்வான், நம்பி ஒரு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்வது கூடாது, ஆபத்து என்று மாமன்றத்தினர் எண்ணினர்.
மாமன்றத்துக்குப் பணிவதுபோல, எலியட், டிகிஸ் இருவரை சிறையிலிருந்து விடுவித்த மன்னன், அதனைத்