67
நாடெங்கும் இந்தப் பிரச்னை எழுச்சியை உண்டாக்கிற்று, மாமன்றத்தின் தொல்லை இல்லை, நமது விருப்பப்படி ஆட்சி நடத்துகிறோம். இது நிம்மதியாக இருக்கிறது என்று எண்ணிக் களிப்படைந்த மன்னன், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்கள் உரிமை முழக்கமிடத் தான் செய்கிறார்கள் என்பதை அறிந்தான்—திருந்தினானா என்றால், இல்லை, மக்கள் இன்னும் திருந்தவில்லையே என்றெண்ணி வருந்தினான்.
மாமன்றம் முதலில் உரிமை முழக்கம் கிளப்பிய போதே, மன்னன் சார்பிலே பேசும் பிரமுகர் ஒருவர். “பல்வேறு நாடுகளிலே, மன்னர்கள், மாமன்றங்கள் வரம்பு மீறி நடந்துகொள்ளத் தொடங்கியதும், கலைத்து விட்டனர்; ஆட்சி, மன்னராலேயே நடத்தப்படுகிறது; இங்குதான் மாமன்றம் இருக்கிறது, இதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று எச்சரித்தான்.
“கேட்கும் தொகையைத் தந்துவிடுங்கள்; மாமன்றம் மன்னன் சொல் கேட்டு நடந்து, மதிப்புப் பெறட்டும்; வீண்பேச்சில் ஈடுபட்டு, பணம்தர மறுத்தால், காரியம் ஏதும் கெட்டுப்போகாது, பணம்பெற வேறு வழிகள் உள்ளன” என்று மன்னனே மிரட்டினான்.
‘மிரட்டுகிறேன் என்று எண்ணாதீர்கள் — எனக்கு ஈடானவர்களைத்தான் நான் மிரட்டுவேன், உங்களை அல்ல’ என்று ஏளனமும் ஆணவமும் குழைத்துக் கூறினான், வேறோர் சமயத்தில், வேந்தன்.
இவ்வளவு வெளிப்படையாக விபரீதப்பேச்சுப் பேசியதற்கு காரணம், சார்லசின் தனிப்பட்ட குணக்கேடல்ல, அவன் கொண்டிருந்த தத்துவம், அவனை அங்ஙனம் ஆட்டிப்படைத்தது.
மன்னனிடம் படை இருந்தது; ஆனால் உடைகூடச்