உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

ளுக்கும், நிலமிழந்து நொந்துகிடந்த ஐயர்லந்து வாசிகளுக்கும்‌ பூசல்‌, பிரிட்டிஷாருக்கும்‌ ஸ்காத்லந்துக்காரருக்‌கும் சச்சரவு, கத்தோலிக்கருக்கும்‌ பிராடெஸ்ட்டென்‌டுகளுக்கும் போர்‌! வென்ட்‌ஓர்த இந்தச்‌ சூழ்நிலையைப்‌ பயன்படுத்திக்கொண்டு கொடுங்கோலனானான்‌.

ஐயர்லாந்தில்‌ வென்ட்ஒர்த்‌, அடித்து நொறுக்குகிறான்‌, அரச ஆதிக்கத்தை வளரச் செய்கிறான். மக்கள் மடிந்தாலும்‌ மன்னனுடைய நிலை உயரவேண்டும்‌ என்று வேலை செய்கிறான்‌. பிரிட்டனில்‌ லாட்‌, மார்க்கத்துறையின்‌ செல்வாக்கு அனைத்தையும்‌ மன்னன்‌ சார்பிலே திருப்பி விடுவதுடன்‌, அடக்குமுறையால்‌, உரிமைக்‌ கிளர்ச்சியை கருவறுத்த வண்ணமிருக்கிறான்‌. வேங்கைகளால்‌ துரத்தப்படும்‌ மானினமாயினர்‌ மக்கள்‌! துள்ளி வருகுது வேல்‌! என்று கூறும்‌ நாள்‌ வரவில்லை! இரத்த வெறிபிடித்தலையும்‌ வேங்கைகள்‌, தம்‌ இனத்தவரின்‌ உடல்‌ சின்னாபின்னமாக்கப்படுவது கண்டு, மிரண்டு ஓடும்‌ மானினம்‌! நாடு, காடு ஆயிற்று! இந்நிலையில்‌, வேங்கைகளை வெந்து கருகிடச்‌ செய்யவல்ல, பெரு நெருப்பை, மன்னனே மூட்டிட நேர்ந்தது — தெரிந்து அல்ல.

மன்னனுடைய போக்கு பிரிட்டனில்‌ எளிதாகப்‌ புகுத்த முடிந்ததுபோல, ஸ்காத்லாந்தில்‌ இயலவில்லை. மலைகளும்‌ சிறு குன்றுகளும்‌, இவைகளுக்கிடையே அமைந்த சிற்றூர்களில்‌ வாழ்ந்துவந்த ஸ்காட்‌ மக்கள்‌ வீராவேசம்‌ குன்றாமல்‌ வாழ்ந்து வந்தனர்‌. எளிய வாழ்க்கை கடும்‌ உழைப்பு. சாவுக்கு அஞ்சாத நெஞ்சத்‌தினர்‌, நாடு வளமாகாததால்‌, பலர்‌ வெளிநாடுகளில்‌ சென்று, படை வீரராகி கீர்த்திமிக்கவராயினர்‌. இந்த ஸ்காத்லாந்து நாட்டை, சார்லஸ்‌ குத்திப்பார்த்தான்‌- குலை தடுக்கமெடுக்குமளவுக்குப்‌ பகை கக்கினர்‌.