100
நெருக்கடியின்போது மாமன்றத்தைக் கூட்டுவதும். பிறகு கலைந்து போகச் சொல்வதும், எதேச்சாதிகாரத்தை வளர்க்கும் செயலாகும். இதனாலேயே, சார்லஸ் பதினோராண்டுகள் மாமன்றம் கூட்டாமலேயே ஆதிக்கம் புரிந்தான். இந்தக் கேடுகளைய முனைந்தது மாமன்றம் மூன்றாண்டுக் காலத்துக்குமேல், மாமன்றம் கூட்டாமலிருப்பது சட்ட விரோதமாகும் என்றும், கூடிய மாமன்றத்தை அதன் சம்மதம் பெறாமல் ஐம்பது நாட்களுக்குள் கலைப்பது கூடாதென்றும் சட்டம் இயற்றினர். இனி மன்னன், மாமன்றம் என்ன செய்யும் என்று ஆணவம் பேச முடியாது! தன் செயல்களுக்கு கணக்குக் காட்ட வேண்டிய காலம், மூன்றாண்டுகளில் வந்து தீரும் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் இந்தப் புதிய ஏற்பாடு பெரிதும் முக்கியத்வம் வாய்ந்ததாகும்.
மார்க்கத்துறையினர் அரசியலில் அதிகாரம் செலுத்துவதை அறவே ஒழித்தாக வேண்டும் என்ற எண்ணம் மாமன்றத்தில் வலுத்தது. ‘வேரறக்களைவது’ என்ற திட்டம் வலியுறுத்தப்பட்டது.
மன்னன் தன் கண்முன் செய்யப்படும் காரியங்களைத் தடுக்கும் சக்தியற்று இருந்தான். இவைகளுக்குச் சம்மதம் தந்தால்தான், மாமன்றம், பணம் தருகிறது—பணமோ தேவை; செய்துகொண்ட ஏற்பாட்டின்படி இரு படைகளுக்கும் செலுத்துவதற்கு.
மன்னன் உள்ளம் இவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை; கரத்திலே வலு இல்லை; எனவே சமயத்தை எதிர்நோக்கியபடி இருந்தான்.
முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றவண்ணம் இருந்தன. மன்னனிடம் கெஞ்சிப் பேசிப் பிழைத்து வந்த கும்பல், இந்த ஆபத்தை நீக்கினால், இலாபம் பிறகு