பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகல துறைகளிலும் துரித முன்னேற்றம் ஏற்பட்டு வருவதும் மற்றுமுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு புதிய சர்வ தேசிய வெகுஜனத் தகவல் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

ஒரு புதிய சர்வதேசிய வெகுஜனத் தகவல் அமைப்பு என்ற கருத்து விளக்கிக் கூறப்பட வேண்டியது ஆகும். சர்வதேசியத் தகவல் துறையில் தற்போதுள்ள அமைப்பை அகற்றி விட்டு புதிதாக ஒன்றைப் புகுத்துவது என்பது அல்ல இதன் முக்கிய அடிப்படை. உலகம் முழுவதையும் அனைத்துக் கொள்ளக்கூடிய வெகுஜனத் தகவல் அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும்; அனைத்துத் துறைகளிலும், அனைத்து நாடுகளினதும் அனைத்து மக்களினதும் நலன் களையும் கருத்தில் கொண்டு சர்வதேசத் தகவல் பரிமாற் நங்களே அனுபவசாத்தியமாகக் கூடிய விதத்தில் அந்த அமைப்பு இயங்க வேண்டும். இதையே பெரும்பான்மை யான நாடுகள் உரிமையோடு கேட்கின்றன.

ஏற்கனவே கூறப்பட்டிருப்பது போல், இத்துறையில் வளர்ந்து வரும் நாடுகளின் நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், இச்செயல்முறைகளுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் அனுஷ்டிக்கிற விரோதப் போக்கும் அதிகரித்து வருகிறது.

சர்வதேச வாழ்வின் இந்த முக்கியமான துறையில் நடைபெறுகிற போராட்டம் தொடர்ந்து பெரிய அளவில், மிகுந்த வலிமையுடன் நடைபெறும் என்பது இதிலிருந்து புலளுகிறது. வளர்ந்து வரும் நாடுகள், அவற்றின் நட்பு நாடுகள் மற்றும் துணை நாடுகள்-சோஷலிச சமுதாயத்தைச் சேர்ந்த நாடுகள்-ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக் கைகள்தான் இதில் வெற்றியைக் கொண்டு சேர்க்க முடியும் ,

-இ