பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலியாகவே இருக்கும். நமக்கு சமுதாயப் பொறுப்பு இருக்கிறது என்ருலும்கூட முதன்மையாக இருக்கக் கூடிய வியாபாரம் அக்கறைகளைக் கவனித்த பின்னரே சமுதாயப் பொறுப்பை நிறைவேற்றுவோம்.”

சமுதாயப் பொறுப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பணம் பண்ணுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, பணுதிபதிகள் கலாசாரச் சீர்குலைப்பை வெற்றிகரமாக திறைவேற்றிக் கொண்டிருக்கிரு.ர்கள். திரைக்கு வருகிற படங்களே இதற்கு சாட்சிகள் ஆகின்றன.

'நமது நாட்டின் இன்றைய சினிமாக்கள் எந்த ண்திதியில் இருக்கின்றன? எந்த ஒரு சினிமாப் படமேனும் தேசத்தின் ஆவல் இன்னதென்று தெளிவுபடுத்திக் காட்டு கிறதா? அதனை இன்ன மாதிரியாகக் களையவேண்டும் என்று ஏதேனும் ஒரு வகையாக எடுத்துச் சொல்லுகிறதா? படம் பிடிப்போருக்கும் தேசபக்திக்கும் ஏதேனும் தொடர்பிருக் கிறதா? வெகு மும்முரத்துடன் நடைபெற்றுவரும் இந்த சினிமாத் தொழிலானது, நமது தேசிய வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் துணை செய்திருக்கிறது?...... பணப்பையின் மீது கைவைத்துக் கொண்டிருக்கும் படமுதலாளிகள் எந்த மாதிரியான காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கிருர்கள்? ரச உணர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய காட்சி களுக்கே. இத்தகைய காட்சிகள் ஜனங்களுடைய மனசை எவ்வளவு தூரம் சிதிலப்படுத்த வேண்டுமோ அவ்வளவு துரம் சிதிலப்படுத்தி வருகின்றன. கீழான எண்ணங்கள் கீழான ஆசைகள் முதலியவற்றைத் தூண்டிவிடுகின்ற இந்தக் காட்சிகளை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண் டிருக்கும் ஜனங்கள் தங்கள் தனித்துவத்தைக்கூட நாளா வட்டத்தில் இழந்து விடுகிருர்கள். இத்தகைய ஜனங்களைக் கொண்ட ஜாதிக்கு க ைட சி யி ல் மனம், மானம் என்பவைகளே இல்லாமல் போகின்றன... ......

"சமுதாய வளர்ச்சிக்கும் இந்த சினிமாக்களுக்கும். ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஒரே ஒருவித சம்பந்தம்

2 {} .