பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக நழுவி விடுகிரு.ர்கள், ஜனங்கள் இத்தகைய காட்சி களேத்தான் அதிகமாக ரசிக்கிருர்கள். ஆண்களும் பெண் களும் விரும்பிப் பார்க்கிரு.ர்கள். மக்கள் எதை விரும்பு கிருர்களோ அதையே நாங்கள் அவர்களுக்குக் கொடுக் இருேம் என்று கூறி.

இதுகூட மேலைநாட்டுக் கலை உலகில் கூறப்படுகிற கருத்தின் எதிரொலிதான். திரைப் படங்களுக்கு ஏற்ற மிக ஜனரஞ்சகமான நாவல்களே எழுதுபவர்களில் ஒருவரான கெரார்டு டிவில்லியர்ஸ் ஒளிவுமறைவு இல்லாமல் இதுபற்றி அறிவித்திருக்கிரு.ர். அவர் கூறுகிருர்:

'வாசகனை மகிழ்விப்பதும், அவன் சிறிது நேரம் ஒரு கணவு உலகில் சஞ்சரிக்க உதவுவதுமே எனது நோக்கம். இதைத் தவிர நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. இதில் நான் பெரும் வெற்றி பெற்றுள்ளேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் ஏராளமாக சம்பாதிக்கிறேன். இது என் வெற்றியின் முதல் அறிகுறி. ரசிகன் எதை விரும்பு கிருளுே அதையே நான் அவனுக்கு வழங்குகிறேன். மக்கள் ஒரு கனவின் பின்னுல் ஒடுகிருர்கள். போதை மருந்துப் பழக்கம் என்ருல் என்ன என்று நீங்கள் என்றேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? போதைப் பொருளுக்கு அடிமையானவனும் ஒரு கனவை நாடியே செல்கிருன். சலிப்பும் விரோதமும் குரோதமும் நிறைந்த சுற்றுச் சூழவிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கிருன் என்று கருது கிறேன். தொழில் வகையில் நான் ஒரு சேர்மானக் குறிப்பை வைத்துள்ளேன்.சமையலில் பயன்படுத்துகிருேமே அத்தகைய குறிப்பு அது. வெற்றிக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. இத்தக் குறிப்பில் முதல் கலவைப் பொருள் வன்முறை. இரண்டாவது கலவைப் பொருள் காமவெறியிலிருந்து ஒரு சிட்டிகை. மூன்ருவது கலவைப் பொருள் சிற்றின்ப உலகி விருந்து சில நறுமணச் சாமான்கள். இந்தச் சேர்மானங்களி விருந்து உருவாகும் தயாரிப்பைத்தான் ஜனங்கள் என்னிட மிருந்து எதிர்பார்க்கிருர்கள்.'

33