பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'முதல் பார்வையில், அந்தச் சூழ்நிலை நகரத்தின் பெரும்பாலான இரவு விடுதிகளில் உள்ளது போலவே இருந்தது. மங்கலான விளக்கு வெளிச்சம், புகை மூட்டம், கண்ணுடித் தம்ளர்களின் கிணுகினுப்பு, பல குரல்களின் கடுர ஒவி; இவற்றுக்குப் பின்னணி போல ஒரு இசை, இரண்டாவது பார்வையில், அறை முழுவதும் நிறைந்துள்ள மகளிரும், ஒரு சில மேஜைகளின் முன் சிதறித் தோன்றிய சிற்சில ஆண்களும் தென்படுகிருர்கள். இளைஞர்கள், மிக அதிகமான, குறுகிய பிகினி உடை போன்ற ஜி-ஸ்ட்ரிங் ஆடைகளில் காணப்படுகிருர்கள். கையில்லாத மேல் சட்டைகள் அவர்களது ஆண்மை செறிந்த மார்புகளே வெளிக்காட்டும்படி முன்பக்கம் திறந்திருக்கின்றன. முழங்கால் உயரத்துக்கு, தோலால் ஆன பூட்ஸ் அணிந் துள்ள அவர்கள் அங்கே கூடியிருக்கும் சுமார் 280 வாடிக்கை யாளர்களுக்கு மதுவகைகள் கொடுக்கும் வேலையை கவனிக் கிருர்கள்.

அறை நடுவில் உயரமான சாய்வு அமைப்பு ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் விளிம்பு போல் ஒரு பலகை. அதுவே மதுவகைகளை வழங்குவதற்கு உரிய இடமாகவும் உதவுகிறது. அது ஏகதேசம் நிறைந்து காணப்படுகிறது. அந்தப் பெரிய அறையின் மீதிப் பகுதியில் மேஜைகள் நிறைந்திருக்கின்றன. ஒரு சுவரை ஒட்டி நீளப்பலகை ஒன்றும் இருக்கிறது.

அங்கே குழுமியிருந்த பெண்கள் அனைவரும் உல்லாச மாய் பொழுது போக்குவதாகவே தோன்றியது.

மறைவாக இருந்த விளக்குகளின் ஒளி நடுவான சாய்வு அமைப்பை வெளிச்சப்படுத்தியது. பதினான்காம் லூயி மன்னன் காலத்திய கறுப்பு உடை தரித்த ஓர் இளைஞன் , மிக நவீன காலத்திய பிரெஞ்சு பாப் சங்கீத வெற்றிப் பாடலின் ஒலிக்கு ஏற்ப ஆடியபடி பிரவேசிக் கிருன். அங்கு எழுந்த பலத்த கரவொலி அவனுக்கு இருக்கிற மதிப்பை புலப்படுத்துகிறது. மிக உயர்ந்த மதிப்பு

45