பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமா, டெலிவிஷன் நிகழ்ச்சிகள், மற்றும் கலைத் தயாரிப்புகளில் பயங்கரமான வன்முறைக் காட்சிகளைப் பார்த்து வருவதனல், அவை அனைத்தும் அவற்றைப் பார்ப்பவர்களுக்கு பழகிப்போய் சர்வ சாதாரணம் ஆகி விடுகின்றன. உண்மையான ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள், ஆள் கடத்தல்கள், கொலைகள் முதலியவற்றின் கொடுமை: யையும் பயங்கரத்தையும்கூட மக்கள் உணராது :ோகக் கூடிய நில் ஏற்பட்டுவிடும். இப்படி ஒரு உளவியல் உண்மையை எடுத்துக்கூறி, அதஞல் விளையக் கூடிய ஆபத்தையும் விபரீதத்தையும் சிந்திக்கும்படி விவேகம் மிக்க அறிவாளிகள் தூண்டத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில், இப்போதே, குற்றங்களும் கொலைகளும் வன்முறைச் செயல்களும் ஒரு வாழ்க்கை முறையாகவே அமைந்து விட்டன என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகிரு.ர்கள். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் திகழ்ந்து வரும் பலரகமான கொள்ளைகள், தாக்குதல்கள், கொலைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளும் தொலைக் காட்சியும் வெளியிட்டு வருகின்றன. வருடம் தோறும் 1.3 கோடி அமெரிக்கர்கள் தங்கள் உடைமைகளே கொள்ளை கொடுக்கிருர்கள்: 23 ஆயிரம் பேர் கொள்ளையர்களால் கொலை செய்யப்படுகிரு.ர்கள் என்று புள்ளி விவரங்கள் பேசுகின்றன.

  • வன்முறை அமெரிக்க வாழ்க்கை முறையில் ஒர் அங்கம் ஆகிவிட்டது. ஒரு தகராறுக்குத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி துப்பாக்கியை தூக்குவதுதான் என்றும், உற்சாகம் பெறுவதற்கான ஒரே வழி மற்றவர்களை அழிப்பது தான் என்றும் அமெரிக்கரில் மிகப்பலர் முடிவுக்கு வந்து விட்டார்கள். அமெரிக்கா நெடுகிலும் நடைபெற்று வருகிற சகல விதமான வன்முறைச் செயல்களும், பொருள்களே கொள்ளையடித்தலும், கற்பழிப்பும் வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்று அமெரிக்கக் கட்டுரையாளர் ஒருவர் எழுதியிருக்கிரு.ர்.

77