பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கியமாக இரண்டு நோக்கங்கள் உண்டு:

உலக சோஷலிசத்துக்கும், கம்யூனிச சித்தாந்தத்திற்கும் எதிரான பெரும் போராட்டத்தை நடத்துவது; சோஷலிச சக்திகளின் கூட்டுறவை தகர்ப்பது; அந்த நாடுகளில் உளவியல் போராட்டம் மூலமும், முதலாளித்துவ சித்தாந்த குழிபறிப்பு வேலைகள் மூலமும், உலகம் பூராவும் முதலாளித்துவ அமைப்பை மீண்டும் கொண்டு வருவதற்

கான பெரும் போராட்டத்தை நடத்துவது.இது முதலாவது நோக்கம்.

ஏகாதிபத்தியவாதிகளது பிரசாரத்தின் இரண்டாவது நோக்கம்: வளரும் நாடுகளில் நடைபெறுகிற புரட்சிகர மாற்றங்களைத் தடுப்பது: ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை ஏகாதிபத்திய ஆதிக்கத்தினுள் வைத்து, மேலைய ஏகபோக மூலதனத்தின் சுரண்டலுக்கான சூழ் நிலைகளை அந்நாடுகளில் தோற்றுவிப்பது.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ அமைப்புமுறை நீடித்து வளர்வதற்கும், பூர்ஷவா சித்தாந்தத்தையும் அவ்வர்க்கத்திய ஒழுக்கங் களையும் ருசிகளையும் பரப்புவதற்கும் தாங்கள் செய்கிற பிரசாரங்கள் துணைபுரிய வேண்டும் என்பதில் ஏகாதிபத்திய நாடுகள் மிகுந்த கருத்து செலுத்துகின்றன.

வளரும் நாடுகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் பல உள்ளன. பயன் மிகுந்த தேசியக் கொள்கையை நிறைவேற்றுவது; முன்னேற்றத்துக்கான செயல்முறைகளில் முனைந்து ஈடுபடுவது; ஸ்தல அனுப வங்களை பிரபலப்படுத்துவது; உற்பத்தி சக்திகளின் பங்கை உயர்த்தி, உழைப்பாளர்களது உற்சாகத்தையும் ஒருமைப் பாட்டையும் ஊக்குவிப்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கு வது; இவற்றுக்காகத் தங்கள் திறமை முழுவதையும் ஒன்று திரட்ட வேண்டியது அவசியம் ஆகிறது.

97