பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மக்கன்குழு ஒப்பந்தம் பொருளைப் பார்த்தோ அல்லது முன்பு பார்த்ததை நினைத்துக் கொண்டோ, அதேபோல் பாறையிலோ - சுவரிலோ-ஒலையிலோ-துணியிலோ - தாளிலோ - அட்டை யிலோ-மரப்பலகையிலோ-இரும்புத் தகட்டிலோ-கண்ணாடி யிலோ-இன்னும் ஏதாவது ஒன்றிலோ வரைந்து அமைப்ப தாகும். ஒவியத்திற்குத் தமிழில் ஒவு, ஒவம் என்னும் பெயர்களும் உண்டு. ஒவ்வுதல் என்றால் ஒத்திருத்தல். ஒவ்வுவது வுை-ஒவம்-ஒவ்வுவது ஒவியம் எனக் கருத்து கொள்ள வேண்டும். எனவே, ஒவியம் என்பது மிகவும் பொருத்தமான பெயர்தானே. மகளிர் தொடர்பு: இனி ஒவியத்தோடு மகளிர்க்கு உள்ள தொடர்பைப் பார்க்கலாமா? பழைய புராண - இதிகாச நூல்கள் சில வற்றில் மகளிர் ஓவியம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, உயர்குடி மகளிர் நடனக் கலையோடு ஓவியக் கலையும் பயின்றிருக்க வேண்டும் என்பதான ஒரு கருத்து கூறப்பட்டுள்ளதாம். மற்றும், இந்த நாட்டின் முதல் ஒவியர் சித்திரலேகா என்னும் பெண்மணி என்று சில புராணங்கள் அறிவிப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. சித்திரக்கலையில் வல்லவர் ஆதலின் 'சித்திரலேகா எனப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். சரி, தமிழ் இலக்கியங்களில் என்ன சொல்லப்பட் டுள்ளது என்றும் ஒரு சிறிது நோக்குவோமே. ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களுள் மணிமேகலையும் ஒன்று. மணி மேகலை என்னும் பெண்மணி ஒவிய நூலில் அறிவிக்கப் பட்டுள்ள ஒவியம் வரையும் முறைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவளாம். இதனை அந்தக் காப்பியத்தில் உள்ள,