பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மக்கள்குழு ஒப்பந்தம் கோலம் போடுவதற்கு அரிசி மாவு, சுண்ணப்பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், கரிப்பொடி, பல வண்ண மலர், பல வண்ணக் குழம்புகள் முதலியன பயன்படுத்தப் படுகின் றன. இந்தக் கோலங்களில், கடவுள் உருவம், தேவதைகள் உருவம், பறவை-விலங்குகளின் வடிவம், செடி கொடி மலர்களின் வடிவம், மற்றும் பலவகைப் பொருள்களின் உருவங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு ஒவியக் கலை யறிவு மிகவும் தேவைதானே! எனவே, கோலம் போடுத லிலும் ஓவியக் கலை ஊடுருவியிருப்பது புலப்படும். தமிழ்நாட்டில் பெண்கள் சாதாரண நாட்களில் வீட்டின் தெரு முற்றத்தில் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் தண்ணீர் தெளித்துப் பெருக்கிக் கோலம் போடுவதைக் காணலாம். பண்டிகை நாட்களிலும் விழா நாட்களிலும் மற்றும் மார்கழி மாதம் முழுவதும் தெரு முற்றத்தில் பலவகை வண்ண ஒவியங்களைக் கோலம் என்ற பெயரில் அமைப்பதைக் காணலாம். ஒரு வீட்டாரோடு இன்னொரு வீட்டார் போட்டி போட்டுக் கொண்டு சிறந்த வண்ணங்களால் அழகிய வடிவங்களை அமைப்பதுண்டு. தை முதல் நாளாகிய பெரும்பொங்கல் நாளன்று, தெரு முற்றத்தில், பொங்கல் பானை, அடுப்பு, தேங்காய், பழம், கரும்பு, மஞ்சள் கொத்து முதலிய பொருள்களின் வடிவங்களைக் கோலத்தில் அமைப்பதைப் பல இடங்களில் காணலாம். தமிழகம் போலவே, கர்நாடகத்திலும் மகாராட்டிரத் திலும் ரங்கவல்லி' (ரங்கோலி) என்னும் பெயரிலும், வங்காளத்தில் ஆல்போனா'.என்னும்,பெயரிலும், மற்றும் பல பகுதிகளிலும் மகளிர் கோலம் போட்டு மகிழ்வர். இதுகாறும் கூறியவற்றால், பல கோணங்களில்-பலவித முறைகளில், மகளிர்க்கும் ஒவியக் கலைக்கும் உள்ள தொடர்பினை அறியலாம். ஒவியக் கலையில் மகளிர் பங்கு மிகுதி.