பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மக்கள்குழு ஒப்பந்தம் “Who entertains the harmless day With a well-chosen book or a friend”. என்னும் பகுதியும் இவருக்கு மிகவும் பொருந்தும். வீடு மட்டுமா? இவரது கடிகாரக் கடையும் ஒரு தமிழ்க் கழகம்போல் இருப்பதுண்டு. புதுவையில் உள்ள பல்கலைப் புலவர் உயர்திரு அரங்கநாத பரமதயாளம் பிள்ளையவர்களும் அடியேனும் (சு ச) கடையில் நெடுநேரம் இவருடன் உரையாடிக் கொண்டிருப்போம். தயாளம் பிள்ளையவர்களுடனோ அல்லது என்னுடனோ இவர் கடற்கரைக்குச் செல்வார். சில ஆண்டுகட்கு ஒருமுறை என்னோடு திரையோவியம் (சினிமா) பார்க்கச் செல்வ துண்டு; இது விரல்விட்டு எண்ணக்கூடியதாகும். புலவர்களின் புரவலர் : இராசமாணிக்கனார், நவில்தொறும் நயம் ப்யக்கும் நூல் போன்ற புலவர்களுடன் நட்பு கொண்டிருந்த தன்றி, புலவர்களின் புரவலராகவும் திகழ்ந்தார். இதன் ஒரு பகுதியே, வேங்கடராசுலு ரெட்டியாரோடு இவர் கொண்டிருந்த ஈடுபாடாகும். ரெட்டியார் அவர்கள் புதுவைக்கு வந்த போதெல்லாம் இராச மாணிக்கனாரின் இல்லத்திலேயே தங்கியிருந்தார். தமிழ் விருந்துக்கும் உணவு விருந்துக்கும் சொல்ல வேண்டுமா என்ன! மற்றும், ரெட்டி யார் அவர்களின் இலக்கணக் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து நுண் பொருள் விளக்கம்’ என்னும் பெயரில் ஒரு நூலாக்கித் தம் பொருட் செலவில் புரவலர் வெளி யிட்டார். இஃதொன்றே இருவருக்கும் இடையே இருந்த தொடர்பைப் பறை சாற்றும். ரெட்டியார் மட்டுமா? புலவர் எவர் வரினும், அன்பைத் தூதாக விட்ட புரவலரின் அன்பு மழையில்