பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 115 நனைந்து விடுவர். வீட்டிலும் சரி - கடிகாரக் கடையிலும் சரி - புலமை விருந்தும் உணவு விருந்தும் ஒருசேர இடம் பெறும். இத்தகைய விருந்துகளில் பலமுறை பங்கு கொண்ட பேறு எனக்கு உண்டு. அருட் கொடை: இராசமாணிக்கனாரின் அருட்கொடை, பல வடிவங் களில் நடைபெற்றது. ஏழை மாணாக்கர்கட்கும் ஏழைப் புல்வர்கட்கும் பண உதவி கிடைக்கும். சிற்சிலருக்குக் கடி காரம், கல்வி நூல்கள், உடை முதலிய பொருள்களின் வடிவத்தில் கொடை இருக்கும். சிலருக்கு மருத்துவ உதவி யும் கிடைத்தது உண்டு. 1946-ஆம் ஆண்டு. யான் நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோது, நம் புரவலர் கேள்விப்பட்டுத் தம் மருத்துவருடன் எங்கள் இல்லத்திற்கு வந்து பார்த்து ஆவன செய்தார். மருத்துவச் செலவு இவ ருடையதே. அப்போது யான் வேண்டாமல் கிடைத்த உதவி இது. ஒருமுறை வேங்கடராசுலு ரெட்டியார் இவர் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது, தாம் (ரெட்டியார்) ஒருநாள் இரவு தனியாக, ஒரு துணிக் கடைக்குச் சென்று துணி களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடையி லிருந்து அவ்வழியாக வந்த இராசமாணிக்கனாள் இதைப் பார்த்து விட்டார். ரெட்டியார் அறியாதபடி ஆறு வேட்டி களும் ஆறு துண்டுகளும் வீட்டிற்கு வருமாறு செய்து விட் டார். பின்னர் ரெட்டியார் துணிகளை எடுத்துக் கொண்டு கடைக்காரரிடம் பணம் கொடுக்கச் சென்றபோது, கடைக் காரர் ரெட்டியாரை நோக்கி, “உங்கட்குத் துணிகள் வீட் டிற்குப் போய் விட்டன; நீங்கள் பணம் தரவேண்டிய தில்லை. கையிலுள்ள துணிகளை இங்கே வைத்துவிட்டு