பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 121 னர். "பழந்தமிழர் பண்பாடு” என்பதின் பொருத்தம் இப் போது புலனாகுமே! சான்றுகள்: பழந்தமிழர் பண்பாளராக வாழ்ந்தனர் என்பதற்குச் சான்று வேண்டுமே! அதற்காக நமக்குச் சான்று பகர்வன பழந்தமிழ் நூல்களேயாகும். பழந்தமிழ் நூல்களுள் அழிந்து பட்டுச் சென்றவையே பல; அழியாது நின்றவை சிலவே. நின்ற சில நூல்களுள்ளும் பழைமையானவை எனப்படு பவை தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும், சங்க .நூல்கள் எனப்படும் இலக்கியங்களுமேயாம். இவற்றின் துணைகொண்டு பழந்தமிழர் பண்பாட்டினை அறியமுடி யும். சங்க இலக்கியங்கள் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்டு முற்பட்டவை என்றும், தொல்காப்பியம் ஏறத் தாழ இரண்டாயிரத்தைந்நூறு அல்லது மூவாயிரம் ஆண்டு கட்கு முற்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற னர். மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது எனப்படும் தொல்காப்பியத்தை இயற்றிய ஆசிரியர் தொல்காப்பிய னார், தம் நூலில் பல இடங்களில், ஒரு கருத்தைக் கூறி விட்டு, இப்படியாக முன்னோர் மொழிந்துள்ளனர் என் றெல்லாம், அறிஞர்கள் அறிவித்துள்ளனர்-புலவர்கள் புகன் றுள்ளனர் என்றெல்லாம், தமக்கு முன் வாழ்ந்த முன்னோர் களைச் சுட்டிக் காட்டியுள்ளார். தொல்காப்பியத்தில் “என்மனார் புலவர்,” “மொழிமனார் புலவர்,” “சொல்லி னர் புலவர்,” “யாத்தனர் புலவர், 'செவ்விதென்ப சிறந்தி சினோரே," "நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே,' “என்ப, மொழிப' (கூறுப) முதலிய தொடர்களைப் பல இடங்களில் காணலாம். அங்ங்ண மெனின், தொல்காப்பியர் காலத்துக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு