பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மக்கள்குழு ஒப்பந்தம் முன்பே தமிழறிஞர்கள் பலர் தமிழ் நூல்கள் பல இயற்றியமை புலனாகும். அவையெல்லாம் அழிந்து போயின என்பது அறிந்த செய்தியே. எனவே, ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே அஃதாவது, வரலாற்றுக் காலத்துக்கு முன்பே பழந்தமிழர் பண்பாட்டினை விளக்கும் பழந்தமிழ் நூல்கள் பல இருந்தமை தெளிவு. பண்பாட்டு இலக்கணம்: இது நிற்க, - பழந்தமிழர் பண்பாடு எனப்படுவது யாது? எதை எதையெல்லாம் பண்பாடு எனக் கூறலாம்? இதற்குத் தக்க விடை வேண்டும். பண்பாடு என்றால் என்ன என்று தெளிவு செய்யுமாறு யாரிடம் வினவலாம்? ஒ! ஒ! இதோ கிடைத்து விட்டார். அவர் யார்? உலகப் பெரும் புலவராகிய-உலகப் பொதுப் புலவராகிய திருவள்ளுவர்தாம் அவர். தமது திருக்குறள் நூலில் பண்பாட்டிற்கு அவர் கூறியுள்ள விளக்கம் பின், வருமாறு: - எண்பதத்தால் எய்தல் எளிதென்ப் யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. -- - அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. - நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. நண்பாற்றாராகி நயமில செய்வார்க்கும். பண்பாற்றா ராதல் கடை. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமை யால்திரிந் தற்று. இவை பண்பாட்டு விளக்கக் குறள்கள். திருவள்ளுவர், திருக்குறள்-பொருட்பாலில் 'பண்புடைமை' என்னும். ஒரு