பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் H27 என்பது தொல்காப்பியப் புறத்திணை இயல் 36-ஆம் நூற்பாப் பகுதி. இதில் ஆற்றுப்படைப் பண்பு தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. எனவே, இது மூவாயிரம் ஆண்டுக்கும் முற்பட்ட பழந்தமிழர் பண்பாடு என்பது புலனாகும். பண்பாட்டின் பரப்பு : " உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்: அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே'. என்பது புறநானூற்றுப்பாடல் (182). பண்பாட்டிற்கு வடிவம் தரும் இந்தப் பாடல், திருக்குறளில் பண்புடைமை' என்னும் தலைப்பில் உள்ள, பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன். என்னும் குறட்பாவின் விளக்கமேயாம். இதோ: இன்னும் ஓர் உயரிய பண்பாட்டுக் கொள்கை : -. - ' யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்,