பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 143 'அவ்வாறு வருவன், கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன் என்றுணர்க (நச்சர்) இவ்வுரைப் பகுதிகளால், கலிநூலும் பரிபாடல் நூலும் இசைத்தமிழ் நூல்கள் என்பது புலனாகும். கிடைத்திருக்கும் கடைச்சங்க - காலக் கலித்தொகை, நூல் நூற்றைம்பது பாடல் கொண்டது. கிடைக்காத, இடைச்சங்க காலக் கலிநூலோ, இன்னும் மிகுதியான பாடல்களைக் கொண்டதாகும். அதனால் இதனைப் 'பெருங் கலித்தொகை என்னும் பெயரால் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஒலைச் சுவடிப் பாடல் குறிப் பிடுகிறது. இந்தப் பெருங் கலித்தொகை நூலினின்றும் வேறு பிரித்துக் காட்டவே, இதனினும் சிறிய கடைச் சங்கக் காலக் கலித்தொகை நூல் நூற்றைம்பது கலி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 5. குருகு அடுத்தபடியாகக் குருகு' என்னும் நூல் குறிப்பிடப் பட்டுள்ளது. தலைச்சங்கத்தனவாகக் கூறப்பட்டுள்ள முது நாரை, முதுகுருகு என்னும் நூல்கள் பற்றிக் கூறியுள்ள கருத்துகளை யெல்லாம் இதற்கும் கொள்ள வேண்டும். தலைச் சங்கக் குருகு நூல் முதுகுருகு எனில் இவ்விடைக் சங்கக் குருகு சிறு குருகு நூலாக இருக்கலாமோ-என் னவோ! எங்ங்ண்ம் இருப்பினும், இதும் தமிழிச்ைப் பாடல் தொகை நூல் என்பது போதரும் 6. வியாழ மாலை அகவல் : மாலை என்னும் சொல்லைக் கொண்டு வியாழ மாலை அகவல் என்னும் நூலை ஒரு தொகை நூலாகக்